கமலின் மூத்த மகளான ஸ்ருதி ஹாசன், தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி திரைப்படங்களில் நடித்து வருகிறார். ஆனால், தற்போது படங்களில் நடிப்பதில் அவர் அவ்வளவாக ஆர்வம் காட்டாததோடு, லண்டனை சேர்ந்த மைக்கேல் கார்சேவ் என்பவருடன் அதிகமாக நெருக்கம் காட்டி வருகிறார்.
மைக்கேலை ஸ்ருதி காதலிப்பதாகவும், அவர்களது இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும் தகவல் வெளியானது. அதற்கு ஏற்றவாறு ஸ்ருதி ஹாசனும் மைக்கேலுடன் சுற்றுவதோடு, அவரது அம்மா அக்ஷரா ஹாசனிடமும் அவரை அறிமுகப்படுத்தி வைத்தார். மேலும், கமலிடம் அவரை அறிமுகப்படுத்தி வைத்தார்.

இந்த நிலையில், ஸ்ருதி ஹாசன், மைக்கேல் விவகாரம் குறித்து கமலிடம் கேட்டதற்கு, “என் மகள்களின் திருமணத்தை அவர்கள் தான் முடிவு செய்யவேண்டும். என் கல்யாணத்தையோ விவாகரத்தையோ என் அப்பா முடிவு செய்யவில்லை. அதுபோல அவர்கள் விருப்பத்துக்கே விட்டுவிட்டேன். அவர்கள் சுயவிருப்பம் தான் எனக்கு முக்கியம்.” என்று கூறியுள்ளார்.
'இறுதிப் பக்கம்' திரைப்படத்தைத் தயாரித்த இன்சாம்னியாக்ஸ் ட்ரீம் கிரியேஷன்ஸ் எல்...
தமிழக அரசு மற்றும் NFDC ஆதரவுடன் இந்தோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேஷன் (ICAF) நடத்தும் 23-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா தொடங்கியது...
திரைப்பட தயாரிப்பாளரும், விஜயின் முன்னாள் மேலாளர் மற்றும் ‘கலப்பை மக்கள் இயக்கம்’ நிறுவனர் பி...