Latest News :

யுவனுடன் இணைந்த சாம் சி.எஸ்!
Saturday July-28 2018

தமிழ் சினிமாவில் வேகமாக வளர்ந்து வரும் இசையமைப்பாளர் சாம் சி.எஸ், தொடர்ந்து பல வெற்றிப் படங்களுக்கு இசையமைப்பதோடு, பின்னணி இசை மூலம் பாராட்டும் பெற்று வருகிறார்கள்.

 

‘விக்ரம் வேதா’, ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ என்று தொடர்ந்து தனது வித்தியாசமான இசை மூலம் ரசிகர்களை கவர்ந்து அவரும் அவரது இசையில் உருவாகி வரும் மற்றொரு வித்தியாசமான படம் ‘வஞ்சகர் உலகம்’. 

 

வித்தியாசமான கேங்ஸ்டர் கதையாக உருவாகி வரும் இந்த படத்தில் இடம்பெற்றிருக்கும் பாடல் ஒன்றை யுவன் சங்கர் ராஜா, பாடினால் நன்றாக இருக்கும் என்று நினைத்த சாம் சி.எஸ், தனது எண்ணத்தை யுவனிடன் சொல்ல, அவரும் உடனே ஓகே சொல்லி, பாடலையும் பாடிக் கொடுத்துவிட்டார்.

 

ரொமாண்டிக் டூயட் பாடலான அந்த பாடல் யுவனின் காந்தக் குரலாலும், சாம் சி.எஸ்-ன் வசீகரிக்கும் இசையாலும் ஒலிப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. விரைவில் வெளியாக உள்ள அப்பாடல் நிச்சயம் ரசிகர்களிடம் பெரிதும் வரவேற்பு பெறும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Related News

3135

மதுரையில் நடைபெற்ற ‘கருப்பு’ பட இசை வெளியீட்டு விழா!
Tuesday April-28 2026

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் தயாராகி உள்ள 'கருப்பு' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் கோலாகலமாக நடைபெற்றது...

கிருஷ்ண ஜன்மபூமியில் வெளியான ’கிருஷ்ணாவதாரம்’ டிரைலர்
Monday April-27 2026

கிருஷ்ண ஜன்மபூமியில் ’கிருஷ்ணாவதாரம்’ திரைப்பட டிரைலர் வெளியீடு ஆன்மிகச் சூழலில் நடைபெற்றது...

‘தி இந்தியா ஸ்டோரி’ ஜூலை 24ஆம் தேதி வெளியாகிறது!
Monday April-27 2026

ஒரு தீவிரமான சமூக - தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’  படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ளனர்...

Recent Gallery