அஜித்தின் 57 வது படமான ‘விவேகம்’ நாளை (ஆக.24) உலகம் முழுவதும் வெளியாகும் நிலையில், அவரது ரசிகர்கள் வெவ்வேறு வகையில் படத்தின் வெளியீட்டை கொண்டாடி வருகிறார்கள்.
அந்த வரிசையில், வட சென்னையை சேர்ந்த ரசிகர் மன்றம் சார்பில், 57 கிலோ எடை கொண்ட அஜித் உருவத்திலான இட்லி தயார் செய்து பொது மக்கள் பார்வைக்கு வைக்கப்பட உள்ளது.
வட சென்னை பகுதியில் உள்ள வீர சென்னை தல அஜித் நண்பர்கள் கிளப், தமிழ்நாடு சமையல் கலை தொழிலாளர் முன்னேற்ற சங்கத்துடன் இணைந்து, இந்த இட்லியை உருவாக்க உள்ளனர்.
இந்த இட்லி, சென்னை, தங்கசாலை அருகிள் உள்ள பாரத் திரையரங்க முகப்பில் பிரம்மாண்ட அரங்கு அமைத்து அதில் வைக்கப்பட உள்ளது. இன்று (ஆக.23) மாலை 5 மணிக்கு அஜித் உருவ இட்லியை அவரது ரசிகர்கள், பாரத் திரையரங்கத்தில் வைத்து கொண்டாட உள்ளனர்.
கன்னட சினிமாவின் மூலம் திரைத்துறையில் அறிமுகமான பிரியங்கா மோகன் நீண்ட இடைவேளைக்குப் பிறகு மீண்டும் ஒரு பிரமாண்ட படைப்பில் இணைந்துள்ளார்...
சிந்தியா ப்ரொடக்ஷன் ஹவுஸ் தயாரிப்பில், சிந்தியா லூர்டே நடிக்க, அறிமுக இயக்குநர் தினேஷ் தீனா கதை, திரைக்கதை , வசனம் எழுதி இயக்கியுள்ள திரைப்படம் ‘அனலி’...
இந்திய இசையை உலக அரங்கில் நிலைநிறுத்துவதில் முக்கியப் பங்காற்றிய ஆஸ்கர் மற்றும் கிராமி விருது வென்ற இசைப்புயல் ஏ...