சென்னை வில்லிவாக்கத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் வில்லிவாக்கம் பாரதி நகரில் உள்ள கடந்த ஐந்து ஆண்டுகளாக ஏழை குழந்தைகள் மற்றும் பெண்களின் முன்னேற்றத்திற்க்கும், விளிம்பு நிலையில் இருக்கும் குழந்தைகளின் கல்விக்கு உதவிபுரிந்து வரும் எச்ஐவிஇ பவுண்டேஷன் சார்பாக நடத்தப்படும் கம்யூனிட்டி சென்டர் மூலம் பராமரிப்பில் உள்ள நூறு குழந்தைகளோடு தனது பிறந்தநாளை மிகச்சிறப்பாக கொண்டாடினார் எழுத்தாளர், உளவியல் நிபுணர், சமூக சேவகி, மனித உரிமை போராளி என பன்முக ஆளுமையுடன் வலம் வரும் மிஸ் தமிழ்நாடு பட்டம் வென்ற முன்னாள் அழகி ஷீபா லூர்தஸ்.
சுவீடன் நாட்டிலிருந்து தமிழகம் வந்து களப்பணியாற்றி வரும் இவர் United samaritans india என்ற அமைப்பை உருவாக்கி தொண்டாற்றி வரும் இவர் தன்னுடைய பிறந்த நாளையும் தன்னுடைய முன் உதாரணமாக இருக்கும் அப்துல்கலாம் மற்றும் பெரியாரின் பிறந்த நாள் மற்றும் நினைவு நாளையும் சமூகத்தின் விளிம்பு நிலையில் குழந்தைகளுடனும் கொண்டாடுவதில் பெருவிருப்பமுடையவர். தனது பிறந்த நாளை ஆதரவு அற்ற குழந்தைகளோடு கேக்வெட்டி கொண்டாடியது மற்றும் அன்றி அந்த குழந்தைகளுக்கு தேவையான நோட்டு புத்தகம், பென்சில் பேனா போன்ற உபகரணங்களும்,உணவும் வழங்கப்பட்டது.
தொடர்ந்து பேசிய அவர், பெண்களின் முன்னேற்றத்திற்காக தமிழகம் முழுவதும் தொழிற்பயிற்சி மையத்தை நிறுவி அவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்காகவும், ஏழை குழந்தைகளின் கல்வியை தொடர வழிவகை செய்யவும், அகதிகளாக இருக்கும் மக்களின் வழி அறிந்தவள் நான். ஆகையால் என்னால் முடிந்த உதவிகளை செய்ய முற்படுவேன், என்றும் கூறினார்.
ஜியோ ஹாட்ஸ்டார் ஸ்பெஷலாக வெளியாகி இருக்கும் இணையத் தொடர் ‘குட் வொய்ஃப்’...
அஸ்யூர் பிலிம்ஸ் மற்றும் ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், சக்தி பிலிம் ஃபேக்டரி வெளியீட்டில், அறிமுக இயக்குநர் சண்முகபிரியன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, சுஷ்மிதா பட், மீனாட்சி தினேஷ், அருள்தாஸ், ரமேஷ் திலக், முருகானந்தம் உள்ளிட்ட பலரது நடிப்பில் வெளியான 'லவ் மேரேஜ்' திரைப்படம் - ரசிகர்களின் பேராதரவுடன் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
தன்வீர் தயானந்த யோகி ஜெயந்தி விழா ஜூலை 2 ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிலையில், இவ்விழாவை முன்னிட்டு ’தெய்வீக அற்புதங்களும் மற்றும் ரகசியங்களும்’ என்று சொல்லக்கூடிய ‘டிவைன் மிராக்கல் அண்ட் சீக்ரெட்ஸ்’ (Divine Miracles and Secrets - Part 2) என்ற புத்தகத்தின் இரண்டாம் பாகம் வெளியிடப்பட்டது...