தமிழ் சினிமாவின் தற்போதைய மினிமம் கேரண்டி ஹீரோ விஜய் சேதுபதி தான். அவர் ஓகே சொல்லும் கதை தயாரிப்பாளர்களுக்கு எந்தவித பாதகத்தையும் ஏற்படுத்தாததால், தேனீக்கள் மொய்க்கும் மலர் போல, தயாரிப்பாளர்கள் மொய்க்கும் நடிகராகியிருக்கிறார் விஜய் சேதுபதி.
‘விக்ரம் வேதா’ வெற்றிக்குப் பிறகு தமிழ் சினிமாவைத் தாண்டி பிற மாநில திரையுலகினர் பார்வையும் விஜய் சேதுபதி மீது பட்டிருக்கிறது. அதன் பயனாகத்தான் சிரஞ்சீவியின் 151 வது படத்தில் அவர் ஒப்பந்தமாகியிருக்கிறார்.
இந்த நிலையில், ரூ.5 கோடி சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த விஜய் சேதுபதி, தனது சம்பளத்தை ரூ.7 கோடியாக உயர்த்தியுள்ளாராம். ஆனால் நிலவரப்படி அவர் ரூ.15 கோடி வரை சம்பளம் வாங்களாம் என்று கோடம்பாக்க வட்டாரங்கள் கூறுகின்றனர்.
இந்த விஷயம் விஜய் சேதுபதிக்கும் தெரியும். ஆனால், முதலில் கதை, இயக்குநர் பிறகு தான் சம்பளம் என்பதை கொள்கையாக வைத்துள்ள விஜய் சேதுபதிக்கு ரூ.10 கோடி சம்பளம் கொடுக்க ஒரு தயாரிப்பு நிறுவனம் முன் வந்ததாம், அதை நிராகரித்தவர் முதலில் கதை மற்றும் இயக்குநர் பற்றி சொல்லுங்க, என்றாராம்.
ஆக, பிற நடிகர்கள் சம்பளம் உயர்த்தினால் அது தயாரிப்பாளர்களுக்கு தலை வலியாக அமையும். ஆனால், விஜய் சேதிபதியின் சம்பள உயர்வு என்பது காயத்திற்கு போடும் மருந்தாகவே உள்ளது.
அறிமுக இயக்குநர் அப்பாஸ் ஏ...
பிரபலமான நாவல்கள் திரைப்படங்களாக உருப்பெற்று விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றி பெறுவது தமிழ் சினிமாவில் அதிகரித்து வருகிறது...
‘கே.ஜி.எப்’ புகழ் ஹோம்பாலே பிலிம்ஸ் விஜய் கிரகந்தூர் மற்றும் இயக்குநர் பிரசாந்த் நீல் கூட்டணியில் உருவாகி வரும் மற்றொரு பிரமாண்ட திரைப்படம் ‘சலார்’...