Latest News :

பிளாஷ்டிக் சர்ஜரி செய்து முகத்தை மாற்றிக் கொண்ட தமிழ் நடிகை!
Wednesday August-01 2018

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இல்லை என்றாலும், சொகுசு கார், ஆடம்பரமான வீடு என்று முன்னணி ஹீரோயின்களுக்கான சகல வசதிகளுடன் வாழ்பவர் ராய் லட்சுமி. அரண்மனை, மங்கத்தா ஆகிய படங்கள் மூலம் ராய் லட்சுமியின் தமிழ் மார்க்கெட் உயரும் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், அவருக்கு பெரிய அளவில் வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை

 

இதையடுத்து தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் நடித்தவருக்கு அங்கேயும் சரியான வாய்ப்பு அமையாத நிலையில், ’ஜூலி’ படம் மூலம் பாலிவுட் வாய்ப்பு கிடைக்க, பாலிவுட்டிலாவது ஜெயிக்கலாம் என்ற நம்பிக்கையில் தாராளமாக கவர்ச்சி காட்டி நடித்தார். ஆனால், அந்த படம் எதிர்ப்பார்த்த வெற்றியை பெறாததால் பாலிவுட்டிலும் சரியான வாய்ப்பு இல்லாமல் ராய் லட்சுமி திணறுகிறார்.

 

இந்த நிலையில், தனது உதட்டை அழகுப் படுத்துவதற்காக பிளாஷ்டிக் சர்ஜரி செய்துக்கொண்ட ராய் லட்சுமி, தற்போது அடையாளமே தெரியாத அளவுக்கு புதிய தோற்றத்தையும் பொலிவையும் பெற்றிருக்கிறார்.

 

ராய் லட்சுமியா இது! என்று பார்ப்பவர்கள் ஆச்சரியப்படும் அளவுக்கு அவரது முகத்தோற்றம் மாற்றமடைந்துள்ளது. 

 

தற்போது தனது புதிய புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வைரலாக்கி வரும் ராய் லட்சுமிக்கு, இப்போதாவது நல்ல பட வாய்ப்புகள் கிடைக்கிறதா என்று பார்ப்போம்.

Related News

3155

மதுரையில் நடைபெற்ற ‘கருப்பு’ பட இசை வெளியீட்டு விழா!
Tuesday April-28 2026

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் தயாராகி உள்ள 'கருப்பு' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் கோலாகலமாக நடைபெற்றது...

கிருஷ்ண ஜன்மபூமியில் வெளியான ’கிருஷ்ணாவதாரம்’ டிரைலர்
Monday April-27 2026

கிருஷ்ண ஜன்மபூமியில் ’கிருஷ்ணாவதாரம்’ திரைப்பட டிரைலர் வெளியீடு ஆன்மிகச் சூழலில் நடைபெற்றது...

‘தி இந்தியா ஸ்டோரி’ ஜூலை 24ஆம் தேதி வெளியாகிறது!
Monday April-27 2026

ஒரு தீவிரமான சமூக - தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’  படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ளனர்...

Recent Gallery