உடல் நிலை பாதிப்பில் இருந்து மீண்டு வந்துள்ள விஜயகாந்த், மீண்டும் அரசியல் விவகாரங்களில் ஈடுபட தொடங்கியுள்ளார். பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பது, ஊடகங்களுக்கு பேட்டி அளிப்பது என்று மீண்டும் சுறுசுறுப்பாகியுள்ள அவர் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார்.
அதில், வரும் சட்டசபை தேர்தலில் தேமுதிக தனித்தே போட்டியிடும், என்று உறுதியாக கூறியவர், ரஜினி மற்றும் கமல் அரசியலுக்கு வருவது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, “ரஜினி மற்றும் கமல் என நடிகர்கள் அரசியலுக்கு வருவதைப் பற்றி எதுவும் சொல்ல மாட்டேன். ஏனென்றால் நானும் ஒரு நடிகன் தான். அங்கிருந்து தான் அரசியலுக்கு வந்தேன். என்னைப் பற்றி நடிகர்கள் எந்தக் குறையும் சொல்லவில்லை. எனவே, நானும் அவர்களைப் பற்றியோ அவர்கள் அரசியலுக்கு வருவது பற்றியோ எதுவும் சொல்ல விரும்பவில்லை
விஸ்வரூபம் படத்துக்கு முதன் முதலில் குரல் கொடுத்தவன் நான் தான். ஆனால், அந்தப் பிரச்சினை முடிந்த பிறகு எனக்கு கமல் நன்றி தெரிவிக்கவில்லை. ஆனால், ஜெயலலிதாவை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார்.
நடிகர்கள் கமல், ரஜினி என் யார் அரசியலுக்கு வந்தாலும் மக்கள் முடிவெடுப்பார்கள், அதற்கேற்ப அவர்கள் வாக்களிப்பார்கள்.” என்று தெரிவித்தார்.
நடிகரும் இயக்குநருமான போஸ் வெங்கட் இயக்கத்தில், விமல் நாயகனாக நடித்திருக்கும் படம் ‘சார்’...
உண்மை குற்ற சம்பவங்களின் பின்னணியில் உருவாகும் கிரைம் திரில்லர் படம் ‘யாத்ரீகன்’...
கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் 8 வது சீசனை விஜய் சேதுபதி தொகுத்து வழங்குகிறார்...