இயக்குநர் சுசீந்திரன் இயக்கும் படங்கள் மட்டும் இன்றி, அவர் படத்தில் இடம்பெறும் பாடல்களும் மக்களிடம் எளிதியல் ரீச் ஆவதோடு, திரும்ப திரும்ப கேட்கும் பாடல்களாகவும் இருக்கும்.
‘நான் மகான் அல்ல’, ‘ஆதலால் காதல் செய்வீர்’ என யுவன் - சுசீந்திரன் கூட்டணியில் உருவான இப்படங்களின் பாடல்கள் பெரிய ஹிட் ஆனதோடு, ரசிகர்களின் பேவரைட் பாடல்களாகவும் அமைந்தது. பிறகு என்ன காரணத்தினாலோ, யுவன் - சுசீந்திரன் கூட்டணி பிரிந்துவிட்டார்கள். மீண்டும் அவர்கள் எப்போது ஒன்று சேரப் போகிறார்கள் என்று ஒட்டு மொத்த ரசிகர்களும் எதிர்ப்பார்த்து வந்த நிலையில், தற்போது அவர்கள் மீண்டும் இணைந்திருக்கிறார்கள்.
ஆம், ‘ஜீனியஸ்’ என்ற படத்திற்காக யுவன் - சுசீந்திரன் மீண்டும் இணைந்திருக்கிறார்கள். இப்படத்தின் பாடல்களை வைரமுத்து எழுதுகிறார்.
இந்த படத்தில் இடம் பெறும் பாடல் ஒன்று, விஜய் சூப்பர் சிங்கர் இறுதி சுற்றில் இடம்பிடித்த ஸ்ரீகாந்த் குரலில் சமீபத்தில் ஒலிப்பதிவு செய்யப்பட்டது.
இப்படத்தை முழுவதுமாக முடித்திவிட்ட இயக்குநர் சுசீந்திரன், பின்னணி இசைக்கு முக்கியத்துவம் உள்ள படம் என்பதால், யுவன் சங்கர் ராஜாவிடம் படத்தை திரையிட்டு காண்பித்து பாடல் மற்றும் பின்னணி இசையை மட்டும் இன்றி யுவனின் பாராட்டுகளையும் பெற்று வந்திருக்கிறார்.
சுதேசிவுட்ஸ் பிலிம்ஸ் சார்பில் ரோஷன் தயாரித்து நடித்துள்ள இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் நடைபெற்று வருகிறது. செப்டம்பர் மாதம் இறுதியில் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளனர்.
பிடிஜி யுனிவர்சல் (BTG Universal) நிறுவனத்தின் மூன்றாவது படைப்பாக, நடிகர் அருண் விஜய் நடிப்பில், ’மான் கராத்தே’ இயக்குநர் கிரிஷ் திருக்குமரன் இயக்கத்தில், ஸ்டைலீஷ் ஆக்சன் படமாக உருவாகியுள்ள திரைப்படம் ’ரெட்ட தல’...
சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் மற்றும் கிச்சா கிரியேஷன் தயாரிப்பில், விஜய் கார்த்திகேயன் இயக்கத்தில் நடிகர்கள் கிச்சா சுதீப், நவீன் சந்திரா, விக்ராந்த், யோகி பாபு, தீப்ஷிகா மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மார்க்’...
இயக்குநர் பொன் ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள 'கொம்பு சீவி' திரைப்படத்தில் சரத்குமார், சண்முக பாண்டியன் விஜயகாந்த், தார்னிகா, காளி வெங்கட் , முனீஸ்காந்த், ஜார்ஜ் மரியான், சுஜித் சங்கர், கல்கி ராஜா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்...