Latest News :

இன்சூரன்ஸ் மோசடியை வெளிச்சத்திற்கு கொண்டு வரும் ‘படித்தவுடன் கிழித்துவிடவும்’!
Friday August-03 2018

ஐ கிரியேசன்ஸ் நிறுவனம் சார்பில் ஆர்.உஷா பிரம்மாண்டமான முறையில் தயாரிக்கும் படம் ‘படித்தவுடன் கிழித்துவிடவும்’. கூல் சுரேஷ், பிரதீக், ஸ்ரீதர், சீனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இப்படத்தில் பான்பராக் ரவி, காதல் சரவணன், நெல்லை சிவா, ரோஜாபதி, சபித, ஜெனிபர், சுபாஷி, சுமா, அனிதா, சிறுவன் தனுஷ், சுரேஷ்குமார் ஆகியோர் நடித்துள்ளனர். வில்லனாக எஸ்.எம்.டி.கருணாநிதி அறிமுகமாகிறார்.

 

வாசு ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு நிரோ பிரபாகரன் இசையமைக்கிறார். மாஷா சகோதரிகள், அபிநந்தன் ஆகியோர் பாடல்கல் எழுத, இன்ப ஆர்ட் பிக்ராஷ் கலையை நிர்மாணிக்கிறார். ஸ்டண்ட் கோட்டி ஆக்‌ஷன் காட்சிகளை வடிவமைக்க, முத்துமுனியசாமி எடிட்டிங் செய்கிறார். மணவை புவன் மக்கள் தொடர்பு பணியை கவனிக்க, சுரேஷ்குமார், சேரமணி ஸ்ரீதர் ஆகியோர் இணை தயாரிப்பு செய்துள்ளனர்.

 

இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி செ.ஹரி உத்ரா இயக்குகிறார். இவர் ஏற்கனவே, மீதேன் திட்டத்தால் விவசாய நிலங்கள் எப்படி பாதிக்கப்படுகின்றன என்பதை மையமாக வைத்து ‘தெருநாய்கள்’ என்ற படத்தை இயக்கியிருக்கிறார்.

 

படம் குறித்து இயக்குநர் ஹரி உத்ரா கூறுகையில், “இன்று பரபரப்பான வாழ்க்கை சூழலில் நாம் சில விஷயங்களை செய்வதோடு விட்டுவிடுகிறோம். அப்படி விட்டுவிடுகிற ஒரு முக்கியமான விஷயம் இன்று நாம் வாங்கும் செல்போனிற்குகூட செய்கிறோமே இன்சூரன்ஸ்  அதுதான். அதைபற்றிய ஒரு சிறு பயணம் தான் இந்த ‘படித்தவுடன் கிழித்துவிடவும்’ இன்சூரன்ஸ் இன்று நம் வாழ்வில் தவிர்க்க முடியாத ஒன்றாக இருக்கிறது. அப்படி நாம் செய்யும் இன்சூரன்ஸ் தொகையை வாங்க நாமும் முறையிடுவது இல்லை சம்மந்தப்பட்ட கம்பெனிகளும் அதை மக்களுக்கு அதிகமாக தர முன்வருவதும் இல்லை. இதனால் கிட்டத்தட்ட பல லட்சம் கோடி ரூபாய் மக்கள் பணம் முடங்கி உள்ளன. அப்படி ஒரு அரசியல்வாதியால் இன்சூரன்ஸ் மோசடி செய்யப்பட்டு  இறந்தவர்களின் ஆவிகள் மனிதர்களின் துணை கொண்டு எப்படி அந்த அரசியல்வாதியை பழிவாங்கியது என்பதை காமெடி கலந்து கமர்ஷியலாக  திரைக்கதை அமைத்துள்ளோம்.

 

பிளாஸ்டிக் தொழிற்சாலை கதையின் முக்கிய கதாபாத்திரமாக உள்ளதால் மன்னார்குடி பகுதியில் மிக பிரமாண்டமான பிளாஸ்டிக் தொழிற்சாலை செட் அமைத்து படமாக்கினோம். 90 சதவீதம் படப்பிடிப்பு இரவில் மட்டுமே நடத்தியிருக்கிறோம். அதற்காக  சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட  ரெட் ஹீலியம் என்ற புதுவகையான  கேமராவில் CP3 எனும் லென்ஸை பயன்படுத்தியுள்ளோம். அது இரவு நேர படப்பிடிப்பு காட்சிகளை மிக துல்லியமாக படம்பிடித்துள்ளது.

 

படப்பிடிப்பு மன்னார்குடி, கும்பகோணம், தஞ்சாவூர், சென்னை போன்ற இடங்களில் நடைபெற்றுள்ளது.” என்றார்.

Related News

3178

மதுரையில் நடைபெற்ற ‘கருப்பு’ பட இசை வெளியீட்டு விழா!
Tuesday April-28 2026

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் தயாராகி உள்ள 'கருப்பு' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் கோலாகலமாக நடைபெற்றது...

கிருஷ்ண ஜன்மபூமியில் வெளியான ’கிருஷ்ணாவதாரம்’ டிரைலர்
Monday April-27 2026

கிருஷ்ண ஜன்மபூமியில் ’கிருஷ்ணாவதாரம்’ திரைப்பட டிரைலர் வெளியீடு ஆன்மிகச் சூழலில் நடைபெற்றது...

‘தி இந்தியா ஸ்டோரி’ ஜூலை 24ஆம் தேதி வெளியாகிறது!
Monday April-27 2026

ஒரு தீவிரமான சமூக - தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’  படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ளனர்...

Recent Gallery