Latest News :

எல்லாத்தையும் நாசம் செய்வது தான் ‘மேக் இன் இந்தியா’ - மன்சூரலிகான் காட்டாம்
Saturday August-04 2018

சினிமா, விவசாயம் என எல்லாத்தையும் நாசம் செய்வது தான் ‘மேக் இன் இந்தியா’ பட விழா ஒன்றில் மன்சூரலிகான் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

மீத்தேன் எடுப்பதால் விவசாய நிலங்களும், விவசாயிகளுக்கும் ஏற்படும் பிரச்சினையை பேசிய ‘தெருநாய்கள்’ படத்தை தயாரித்த ஐ கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இரண்டாவது படம் ‘படித்தவுடன் கிழித்துவிடவும்’. ‘தெருநாய்கள்’ படத்தை இயக்கிய ஹரி உத்ரா தான் இந்த படத்தையும் இயக்கியிருக்கிறார்.

 

இப்படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சி சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இதில் கில்டு தலைவர் ஜாக்குவார் தங்கம், நடிகர்கள் ராதாரவி, மன்சூரலிகான், கூல் சுரேஷ், ஆர்யன், இயக்குநர்கள் ஏ.வெங்கடேஷ், பேரரசு, ராம் சிவா, ஆண்டனி, சுரேஷ் சங்கய்யா, இசையமைப்பாளர் அம்ரீஷ், பாடகர் மலேசியா ஷாஸ், பாடலாசிரியர் உமா, பி.ஆர்.ஓ சங்க தலைவர் விஜய முரளி, இப்படத்தின் தயாரிப்பாளர்கள் உஷா, சுரேஷ்குமார், எஸ்.எம்.டி.கருணாநிதி உள்ளிட்ட பல சினிமா பிரபலங்கள் கலந்துக் கொண்டார்கள்.

 

Padithavudan Kizhithuvidavum

 

நிகழ்ச்சியில் பேசிய கில்டு தலைவர் ஜாக்குவார் தங்கம், “தமிழ் சினிமாவில் தமிழன், தமிழ் பெண்கள் தான் நடிக்க வேண்டும். இதை நான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். அதற்கு தமிழ் பெண்கள் நடிக்க வருவதில்லை, என்று பதில் வருகிறது. அழகான தமிழ்ப் பெண்களை நான் தரவா?. தமிழர்கள் தான் லைட் பாய் முதல் இயக்குநர் வரை, அனைத்து தொழில்நுட்பங்களிலும் பணிபுரிய வேண்டும். தமிழ்நாட்டில் தமிழகன் தான் ஆள வேண்டும், வாழ வேண்டும்.” என்றார்.

 

அவரை தொடர்ந்து பேசிய மன்சூரலிகான், ”நான் எந்த சினிமா விழாவுக்கு போனாலும் அந்த படத்தை ஆஹா, ஓஹோ அற்புதம் அப்படின்னு சும்மாங்காட்டியும் பராட்டி பேச மாட்டேன். ஆனால், ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’, ‘வளர்ந்தவுடன் சிதைத்து விடவும்’, ‘சாப்பிட்டவுடன் போய் விடவும்’ அந்த வரிசையில் ‘படித்தவுடன் கிழித்துவிடவும்’ என்னும் இந்த பட டைட்டிலே, இப்படக்குழுவினரின் துணிச்சலைக் காட்டுகிறது.

 

இப்படித்தா, ‘ராஜாதி ராஜ ராஜமார்த்தாண்ட ராஜகுலோத்துங்க...” என என் படத்திற்கு வித்தியாசமாக மிகப்பெரிய நீளமான டைட்டில் வைத்திருந்த போது, ‘தெற்கு தெருமச்சான்’ படப்பிடிப்பு தளத்தில் அதைப் பற்றி என்னிடம் பேசிய நடிகர் சத்யராஜும், இயக்குநர் மணிவண்ணனும், இது என்னய்யா டைட்டில்? போய்யா...,என்றனர். ஆனால், அதன் பிறகு ஒரு நாள் சத்யராஜ் என்னிடம், “ஒரு நிகழ்ச்சியில் என் குடும்பமும், ரஜினி சார் குடும்பமும் கலந்து கொண்டோம். அப்போ, என் பசங்களும், ரஜினி சார் பசங்களும், உங்க பட பேர வச்சி, அதை தப்பு இல்லாம சொல்ற போட்டி நடத்தி சீரியஸா விளையாடினாங்க, அப்பவே நினைச்சேன் நீ ஜெயித்து விட்டாய்...” என்று என்னைப் பாராட்டினார். அப்படி இந்த பட டைட்டிலும் நிச்சயம் எல்லோரையும் பேச வைக்கும்.

 

மோடி அரசு கொண்டு வந்த டிமானிஸ்ட்ரேஷனுக்கு முன்பு, தமிழ் சினிமாவில் தென் இந்திய சினிமா நல்லா இருந்தது. டிமானிஸ்ட்ரேஷனுக்கு அப்புறம் 500 சிறுபட தயாரிப்பாளர்கள் காணாமல் போயிட்டாங்க. அப்படித்தான் விலங்குகள் நல வாரியம்னு ஒரு அமைப்பு, எந்த மிருகத்தை வைத்தும் படம் எடுக்க விடாமல் பண்ணுது. ஒரு படம்னா டீசர், டிரைலர், ஆடியோ ரிலீஸ் விழா எல்லாம் வச்சு, இந்தப் படத்துல இது இருக்கு, அது இருக்குனு சொல்லி ரசிகர்களை அழைக்கிறோம். ஆனா, திடீர்னு எட்டு வழிச்சாலை போடுவோங்கிறது இந்த அரசாங்கம். 8 வழி யார் கேட்டா? 8 வழிச்சாலைக்கு அவசியம் என்னன்னும், அதால யார் யாருக்கு வேலை கிடைக்கும், யாருக்கெல்லாம் பயன், அப்படின்னு இந்த அரசாங்கம் விளக்கணும்ல, சினிமா விழா எடுத்து ரசிகர்களை தியேட்டருக்கு வரவைப்பது மாதிரி 8 வழி ஏன்னு சொல்லு, ஏன் சொல்ல மறுக்கிறாய். இதெற்கெல்லாம் பதில் சொல்லாத இந்த அரசாங்கம், எந்த அளவுக்கு கேடுகெட்ட அரசாங்கம் என்றால், 10 ஆயிரம் கோடி ரூபாய் வருது என்பதற்காக 8 வழிச்சாலை போடத் துடிக்குது. அடுத்து தாய்ப்பாலையும் மீட்டர் வச்சி அளந்து குழந்தைகளுக்கு தர முயற்சிக்கும்.

 

தமிழன் முழித்திருக்கும் போதே அவன் பேண்ட்டை அவிழ்க்கப்பார்கிறது. தமிழன் என்றால் இளக்காரமாகிவிட்டது. கேட்டால் இதெல்லாம் மத்திய அரசின் மேக் இன் இந்தியா திட்டம் என்கிறார்கள். நீ என்ன வெங்காயம் விற்க, மயிர் புடுங்க ஆட்சி நடத்துகிறாய்? ஏழு லட்சம் கோடி என்ன செலவு செய்தீர்கள்? 5 பைசா பொது மக்களுக்கு வந்ததா? சினிமா நாசம், விவசாயம் நாசம், எல்லாம் நாசம். இது தான் மத்திய அரசின் ‘மேக் இன் இந்தியா’ திட்டமா?

 

பெரிய பெரிய நடிகன் பின்னாடி போனா இப்படித்தான். மத்திய அரசின் பணம் செல்லாமை அறிவிப்புக்குப்பின் இரவோடு இரவாக ஓஹோ என ஓடிய படங்கள் எத்தனை, தியேட்டர்களில் எத்தனை படங்கள் ஓடவில்லை, அதற்கு பணத்தை திருப்பி தந்தானா? பணக்காரன் யாராவது கஷ்டப்பட்டானா? பல கோடி புது நோட்டுகள் எப்படி பல பணக்காரன் கையில் கிடைத்தது? இது என்ன நாடா? திருவள்ளுவர் சொன்னது மாதிரி நம் நாட்டை நமக்கே வளமாக்கி எடுத்துக்கொள்ளத் தெரியாதா? ஏன் இத்தனை எதிர்க்கட்சி எம்.எல்.ஏ-க்கள் இருந்தும் யாரும் பேச மறுக்கின்றனர். எல்லாம் கமிஷன் தான் காரணம். கூடிய விரைவில் நாமெல்லாம் ஒன்று கூடி நாம் தமிழர்ன்னு ஆட்சி அமைப்போம்.

 

காந்தி, காமராஜர் எல்லாம் அன்று பிரிட்டீஷ்காரனை ஓடவிட்டார்கள். இன்று இவர்கள், கொரியா, ஜப்பான் காரனை எல்லாம் கூவி கூவி அழைக்கின்றனர். இந்த படம் ‘படித்தவுடன் கிழித்துவிடவும்’. நாம் இந்த மாதிரி திட்டங்களை கிழிக்கவும். நாடு நாசம் ஆவதை தடுக்கவும் தயங்கக்கூடாது.” என்று தெரிவித்தார்.

 

இயக்குநர் ஹரி உத்ரா பேசுகையில், “ஹீரோ ஹீரோயின் வேல்யூ இல்லாத புது குழுவினரின் படங்களும் தியேட்டர்கள் கிடைக்க அனைத்து சினிமா சங்கங்களும் முயற்சிக்க வேண்டும். மீத்தேன் எடுப்பதால் விவசாய நிலம் பாதிப்பு குறித்து என் முதல் படமான ‘தெருநாய்கள் படத்தில் காட்டினேன். அப்படம் பேசப்பட்ட அளவிற்கு போகவில்லை. இரண்டாவதாக இந்த ‘படித்தவுடன் கிழித்துவிடவும்’ படத்தில் ஹாரர் கதை என்றாலும் பேய் வழியாக இன்சூரன்ஸ் எனும் பெயரில், படித்த படிக்காதவன் உள்ளிட்ட எல்லோரிடமும் நடக்கும் கொள்ளையை பேசி உள்ளேன். எஸ்.டி.ஆர், யுவன் உள்ளிட்டோர் இப்படத்தின் சிங்கிள் டிராக், டீஸர் எல்லாம் வெளியிட்டு உதவியது மறக்க முடியாதது நன்றி. இப்படத்தின் வெற்றியை பொறுத்து நிச்சயம் மூன்றாவது படமும் எடுப்பேன்.” என்றார்.

Related News

3179

’இட்லி கடை’ திரைப்பட இசை வெளியீட்டு விழாவின் தொகுப்பு!
Monday September-15 2025

டாவ்ன் பிக்சர்ஸ் (Dawn Pictures) மற்றும் வுண்டர்பார் பிலிம்ஸ் (Dawn Pictures) தயாரிப்பில், நடிகர் தனுஷ் இயக்கி நடித்திருக்கும் ‘இட்லி கடை’ திரைப்படம் வரும் அக்டோபர் 1 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா, ஆயிரக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில், நேற்று சென்னனை, நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரமாண்டமான முறையில் நடைபெற்றது...

வந்த வழியையும், வாழ்ந்த வாழ்க்கையையும் என்றைக்கும் மறக்கக் கூடாது - நடிகர் தனுஷ்
Monday September-15 2025

டாவ்ன் பிக்சர்ஸ் (Dawn Pictures) மற்றும் வுண்டர்பார் பிலிம்ஸ் (Dawn Pictures) தயாரிப்பில், நடிகர் தனுஷ் இயக்கி நடித்திருக்கும் ‘இட்லி கடை’ திரைப்படம் வரும் அக்டோபர் 1 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா, ஆயிரக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில், நேற்று சென்னனை, நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரமாண்டமான முறையில் நடைபெற்றது...

Kollywood Stars in A Rhapsody 2025
Monday September-15 2025

The S.A.College of Arts & Science campus came alive with colors, music, and excitement as SA Rhapsody 2025 unfolded in all its glory on September 13, 2025...

Recent Gallery