வடிவேலு ஹீரோவாக நடித்து மாபெரும் வெற்றிப் பெற்ற ‘இம்சை அரசன் 23-ம் புலிகேசி’ படத்தின் இரண்டாம் பாகத்திற்கு ‘இம்சை அரசன் 24-ம் புலிகேசி’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. சிம்பு தேவன் இயக்கும் இப்படத்தை இயக்குநர் ஷங்கரின் எஸ் பிக்சர்ஸ் மற்றும் லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன.
இன்று இப்படத்தின் பஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றுள்ளது. மேலும், படத்தில் நடிக்கும் பிற நடிகர், நடிகைகள் குறித்து படக்குழுவினர் ஏதும் அறிவிக்காத நிலையில், வடிவேலுக்கு ஜோடியாக முன்னாள் இந்திய அழகி நடிக்க இருக்கும் தகவல் வெளியாகியுள்ளது.
அவர் இந்திய அழகி மட்டுமல்ல, அஜித்துக்கு ஜோடியாகவும் நடித்தவர். ஆம், 2008 ஆம் ஆண்டு இந்திய அழகி பட்டத்தை வென்ற பார்வதி ஓமனக்குட்டன் தான் அவர். ‘பில்லா-2’ படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்த பார்வதி ஓமனக்குட்டன், ’இம்சை அரசன் 24-ம் புலிகேசி’ படத்தில் வடிவேலுக்கு ஜோடியாக நடிக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது. படத்தை அடுத்த ஆண்டு வெளியிட திட்டமிட்டுள்ளனர்.
திரைப்பட தயாரிப்பாளரும், விஜயின் முன்னாள் மேலாளர் மற்றும் ‘கலப்பை மக்கள் இயக்கம்’ நிறுவனர் பி...
சமீபத்திய மழையில் நனைந்த நடை பாதை வியபாரிகளுக்கும், ஏழை எளியவர்களுக்கும், பல உதவிகள் செய்த, கலப்பை மக்கள் இயக்க தலைவர் டாக்டர் பி...
நடிகர் எம்.எஸ்.பாஸ்கரின் மகனும், ‘96’ மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவருமான ஆதித்யா பாஸ்கரும், கெளரி கிஷனும் மீண்டும் இணைந்து நடித்திருக்கும் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததாக படக்குழு அறிவித்துள்ளது...