கடந்த சில நாட்களாகவே தமிழ் சினிமா வட்டாரத்தில் ‘சிவா மனசுல புஷ்பா’ என்ற பெயர் ரொம்ப அதிகமாகவே அடிபட்டுக் கொண்டிருக்கிறது. இத்தனைக்கும், இந்த தலைப்பால் தான் அந்த படத்திற்கு பிரச்சினை என்பது தனிக்கதை.
ஸ்ரீ வாராகி அம்மன் பிக்சர்ஸ் சார்பில் வாராகி தயாரித்து இயக்கி நடித்திருக்கும் இந்த படத்தை பார்த்த சென்சார் குழுவினர், படத்தின் சில காட்சிகளை நீக்க சொல்லியதோடு, சில வசனங்களை மியூட் பண்ணவும் சொல்லியிருக்கிறார்கள். இதற்கெல்லாம் வாராகி ஓகே சொல்ல, திடீரென்று ‘சிவா மனசுல புஷ்பா’ என்ற தலைப்பை மாற்றும்படி சொன்னதோடு, படத்தில் வரும் இரண்டு கதாபாத்திர பெயர்களையும் மாற்ற சொல்லிவிட்டார்களாம்.
படத்தின் அடிமடியிலேயே கை வைக்கிறார்களே, என்று கலங்கிய வாராகி, ரிவைசிங் கமிட்டிக்கு சென்றிருக்கிறார். இதை தொடர்ந்து சென்சார் போர்டில் முக்கிய பொறுப்பில் இருக்கும் நடிகை கெளதமி உள்ளிட்ட சில உறுப்பினர்கள் படத்தை பார்த்திருக்கிறார்கள். படத்தில் ஒரு வார்த்தையை குறிப்பிட்டு மியூட் பண்ண சொன்ன கௌதமி, அதன்பின் டெல்லி தலைமை கூறியது போலவே படத்தின் டைட்டிலையும், படத்தில் சிவா மற்றும் புஷ்பா ஆகியோரின் பெயர்களையும் மாற்றச்சொல்லி வலியுறுத்தினார்.
இயக்குநர் வாராகி, கௌதமியிடம் அதற்கான விளக்கம் கேட்டபோது, படத்தின் டைட்டிலும் கதாபாத்திர பெயர்களும் நிஜத்தில் இருக்கும் சிலரை குறிப்பிடுவதாக கூறியுள்ளார் கௌதமி. மேலும் அந்த இரண்டு கதாபாத்திரங்களும் இப்போதுள்ள நிஜ வாழ்க்கையில் யாரை குறிக்கின்றன என்பதையும் அவரே தன் வாயால் கூறினாராம். அதுமட்டுமல்ல சம்பந்தப்பட்ட அந்த இரண்டு நபர்களிடமும் இருந்து அவர்கள் பெயரை பயன்படுத்த தடையில்லா சான்றிதழ் (NOC) வாங்கி கொடுத்தால் படத்திற்கு சான்றிதழ் வழங்குவதில் எங்களுக்கு ஆட்சேபனை இல்லை என்றும் நிபந்தனை விதித்துள்ளார்.
"கௌதமி அப்படி சொன்னது எங்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது. காரணம் படத்தில் இடம்பெறும் கதாபாத்திரங்கள் யாவும் கற்பனையே என நாங்கள் குறிப்பிட்டிருந்தும் கௌதமி இவ்வாறு சொன்னது ஆச்சர்யம் தந்தது. சரி அவர் சொல்வது போல, யாரை குறிப்பிடுகிறது என்பதை எழுத்துபூர்வமான உத்தரவாக கொடுங்கள்.. நான் அவர்களிடம் இருந்து அனுமதி கடிதம் பெற்று தருகிறேன் என கூறினால் அதற்கு கௌதமி நிர்தாட்சண்யமாக மறுத்துவிட்டார்.
அரசியல் கலந்த காதல் கதையாக இந்தப்படத்தை உருவாக்கியுள்ளேன் இந்தப்படம் தன் கணவனை மாற்றிக்கொள்ளும் ஒரு பெண்ணை பற்றியும் சொல்கிறது.. இதற்கு முன் இதுபோன்ற விஷயத்தை யாருமே, எந்த படங்களுமே சொல்லவில்லையா என்ன..? ஒரு பெண் கணவனை மாற்றிக்கொள்கிறாள் என சொல்லப்பட்ட கதை, கௌதமியை பர்ஷனலாக பாதிக்கிறதா என்பது எனக்கு தெரியவில்லை. இதிலிருந்து சென்சார் குழு உறுப்பினராக படம் பார்த்த கௌதமி, சினிமாவையும் தனது பர்சனல் விஷயங்களையும் ஒன்றாக குழப்பிக்கொண்டு இருக்கிறார் என்பது நன்றாகவே தெரிகிறது.
சினிமாவில் இருப்பவர்களாக இருந்தாலும் சரி, வேறு துறையை சார்ந்தவர்களாக இருந்தாலும் சரி.. சென்சார் போர்டில் உறுப்பினர்களாக இருப்பவர்கள் கதையை கதையாகத்தான் பார்க்கவேண்டும். ஒவ்வொரு கேரக்டரையும் இவர் அவராக இருப்பாரோ என தாங்களாக நினைத்துக்கொண்டு தங்களது சொந்தக்கருத்தை முன்வைத்து சான்றிதழ் வழங்குவதில் பாரபட்சம் காட்டினால் அது சினிமாவின் அழிவுக்குத்தான் வித்திடும். சினிமா உலகத்தில் இருந்துகொண்டே நடிகை கௌதமியும் இப்படி செய்வதுதான் அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது" என்கிறார் வாராகி.
இதையடுத்து நீதிமன்றத்தின் கதவுகளை தட்டுவதற்கும் தயாராகி வருகிறார் இயக்குநரும் தயாரிப்பாளருமான வாராகி.
India's first kid's animation film, 'Kiki & Koko' directed by P.Narayanan and presented by Inika Productions, had its teaser launch event on Dec 26, 2025...
இனிகா புரொடக்ஷன்ஸ் வழங்கும் குழந்தைகளுக்கான இந்தியாவின் முதல் அனிமேஷன் படம் ‘கிகி & கொகொ’...
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஸ்ருதிஹாசன், நடிப்புடன் மட்டுமல்லாமல் தன் இசைத் திறமையாலும் ரசிகர்களின் மனதை வென்று வருகிறார்...