சின்னத்திரை மூலம் தமிழகத்தின் அனைத்து இல்லங்களிலும் நுழைந்து பிரபலமான நடிகை லதா ராவ், தற்போது திரைப்படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார். அதனால் தான் சீரியலில் நடிப்பதை குறைத்துக் கொண்டிருப்பவர் பல திரைப்படங்களில் பல நல்ல கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.
‘தில்லாலங்கடி’ படத்தில் வடிவேலுக்கு ஜோடியாக காமெடி வேடத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமான லதா ராவ், சசிகுமாரின் ‘ஈசன்’, சமுத்திரக்கனின் ‘நிமிர்ந்து நில்’, கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் வெளியான ‘முடிஞ்சா இவன புடி’ என்று படத்திற்கு படம் வித்தியாசமான குணச்சித்திர வேடங்களில் நடித்திருக்கிறார்.
சமீபத்தில் வெளியான ‘கடிகார மனிதர்கள்’ திரைப்படத்தில் கதையின் நாயகன் கிஷோருக்கு மனைவியாக, கதையின் நாயகியாக நடித்திருக்கும் லதா ராவின் கதாபாத்திரமும், அவரது நடிப்பும் பெரும் பாராட்டுப் பெற்றிருக்கிறது.
தற்போது பரத் நடிக்கும் ‘8’, விவேக் மற்றும் தேவயானி நடிக்கும் ‘எழுமின்’ போன்ற படங்களில் நடித்து வரும் லதா ராவ், சினிமாவில் எந்தவிதமான குணச்சித்திர வேடமாக இருந்தாலும் நடிக்க ரெடி, என்று கூறுகிறார்.
வில்லி, காமெடி என்று எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் அதில் நடிக்க ரெடி, என்று கூறியிருப்பவர் சினிமா முழுக்க முழுக்க சினிமாவில் மட்டுமே கவனம் செலுத்தப் போகிறாராம்.
ஜியோ ஹாட்ஸ்டார் ஸ்பெஷலாக வெளியாகி இருக்கும் இணையத் தொடர் ‘குட் வொய்ஃப்’...
அஸ்யூர் பிலிம்ஸ் மற்றும் ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், சக்தி பிலிம் ஃபேக்டரி வெளியீட்டில், அறிமுக இயக்குநர் சண்முகபிரியன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, சுஷ்மிதா பட், மீனாட்சி தினேஷ், அருள்தாஸ், ரமேஷ் திலக், முருகானந்தம் உள்ளிட்ட பலரது நடிப்பில் வெளியான 'லவ் மேரேஜ்' திரைப்படம் - ரசிகர்களின் பேராதரவுடன் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
தன்வீர் தயானந்த யோகி ஜெயந்தி விழா ஜூலை 2 ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிலையில், இவ்விழாவை முன்னிட்டு ’தெய்வீக அற்புதங்களும் மற்றும் ரகசியங்களும்’ என்று சொல்லக்கூடிய ‘டிவைன் மிராக்கல் அண்ட் சீக்ரெட்ஸ்’ (Divine Miracles and Secrets - Part 2) என்ற புத்தகத்தின் இரண்டாம் பாகம் வெளியிடப்பட்டது...