முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு.கருணாநிதி மறைவுக்கு பல்வேறு துறையை சேர்ந்தவர்கள் நேரில் அஞ்சலி செலுத்தி வருவதோடு, இறங்கல் செய்தியும் வெளியிட்டு வருகிறார்கள்.
அந்த வகையில், நடிகர் அஜித் கலைஞர் மறைவுக்கு இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “முத்தமிழ் அறிஞர், மூத்த தலைவர், ஐந்து முறை தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் ஐயா அவர்கள் சொல்வன்மை, மொழிப்புலமை, அரசியல் பெருவாழ்வு, நிர்வாகத்திறன் நிறைந்த தலைவர்.
அவரது பிரிவால் வாடும் அவரது குடும்பத்தாருக்கும், திராவிட முனேற்ற கழக தொண்டர்களுக்கும், என் சக தமிழக மக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்.
அவரது ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுக்கொள்கிறேன்.
பிடிஜி யுனிவர்சல் (BTG Universal) நிறுவனத்தின் மூன்றாவது படைப்பாக, நடிகர் அருண் விஜய் நடிப்பில், ’மான் கராத்தே’ இயக்குநர் கிரிஷ் திருக்குமரன் இயக்கத்தில், ஸ்டைலீஷ் ஆக்சன் படமாக உருவாகியுள்ள திரைப்படம் ’ரெட்ட தல’...
சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் மற்றும் கிச்சா கிரியேஷன் தயாரிப்பில், விஜய் கார்த்திகேயன் இயக்கத்தில் நடிகர்கள் கிச்சா சுதீப், நவீன் சந்திரா, விக்ராந்த், யோகி பாபு, தீப்ஷிகா மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மார்க்’...
இயக்குநர் பொன் ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள 'கொம்பு சீவி' திரைப்படத்தில் சரத்குமார், சண்முக பாண்டியன் விஜயகாந்த், தார்னிகா, காளி வெங்கட் , முனீஸ்காந்த், ஜார்ஜ் மரியான், சுஜித் சங்கர், கல்கி ராஜா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்...