மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திமுக தலைவர் மு.கருணாநிதி, நேற்று மாலை சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு பிரதமர், ஜனாதிபதி, முதல்வர்கள் உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
கருணாநிதியின் உடல் ராஜாஜி அரங்கில் வைக்கப்பட்டுள்ளது. இங்கு ஏராளமான அரசியல் தலைவர்கள், சினிமா பிரமுகர்கள் மற்றும் பொது மக்கள் என்று ஏராளமானோர் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
இந்நிலையில், ராஜாஜி அரங்கத்தில் வைக்கப்பட்டிருந்த கருணாநிதி உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் தனது குடும்பத்துடன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அவருடன் லதா ரஜினிகாந்த், அவரது மகள் ஐஸ்வர்யா, மருமகன் தனுஷ் ஆகியோரும் கருணாநிதி உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
பிடிஜி யுனிவர்சல் (BTG Universal) நிறுவனத்தின் மூன்றாவது படைப்பாக, நடிகர் அருண் விஜய் நடிப்பில், ’மான் கராத்தே’ இயக்குநர் கிரிஷ் திருக்குமரன் இயக்கத்தில், ஸ்டைலீஷ் ஆக்சன் படமாக உருவாகியுள்ள திரைப்படம் ’ரெட்ட தல’...
சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் மற்றும் கிச்சா கிரியேஷன் தயாரிப்பில், விஜய் கார்த்திகேயன் இயக்கத்தில் நடிகர்கள் கிச்சா சுதீப், நவீன் சந்திரா, விக்ராந்த், யோகி பாபு, தீப்ஷிகா மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மார்க்’...
இயக்குநர் பொன் ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள 'கொம்பு சீவி' திரைப்படத்தில் சரத்குமார், சண்முக பாண்டியன் விஜயகாந்த், தார்னிகா, காளி வெங்கட் , முனீஸ்காந்த், ஜார்ஜ் மரியான், சுஜித் சங்கர், கல்கி ராஜா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்...