திமுக தலைவர் மு.கருணாநிதியின் உடலுக்கு சினிமா பிரபலங்கள் பார் நேரில் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
ரஜினிகாந்த், சிவகுமார், சூர்யா, சிவகார்த்திகேயன், அஜித், தனுஷ், சினேகா, பிரசன்னா, விக்ரம் புரபு, நடிகை சரோஜா தேவி, குஷ்பு, பிரபு உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தியுள்ளார்கள்.
இந்த நிலையில், பிரபல நடிகை ராதிகா, கலைஞர் அப்பாவின் இறுதி யாத்திரையில் பங்கேற்க முடியவில்லையே..என்று வருத்தப்பட்டுக் கொண்டிருக்கிறார்.
ராதிகா அவரது மகன் ராகுலை பள்ளியில் சேர்ப்பதற்காக தற்போது சிங்கப்பூரில் இருக்கிறாராம். இதனால் தான அவரால் கலைஞரின் இறுதி யாத்திரையில் பங்கேற்க முடியவில்லை.

இது குறித்து தனது வருத்தத்தையும் வேதனையையும் தெரிவித்திருக்கும் ராதிகா, என் மகன் ராகுலுடன் பள்ளியில் சேர்க்க சிங்கப்பூர் வந்ததால் அப்பாவின் இறுதி யாத்திரையில் கலந்து கொள்ளமுடியாததை வேதனை கலந்த சோகத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். அவரை இழந்து தவிக்கின்ற குடும்பத்தார் அனைவருக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.
பிடிஜி யுனிவர்சல் (BTG Universal) நிறுவனத்தின் மூன்றாவது படைப்பாக, நடிகர் அருண் விஜய் நடிப்பில், ’மான் கராத்தே’ இயக்குநர் கிரிஷ் திருக்குமரன் இயக்கத்தில், ஸ்டைலீஷ் ஆக்சன் படமாக உருவாகியுள்ள திரைப்படம் ’ரெட்ட தல’...
சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் மற்றும் கிச்சா கிரியேஷன் தயாரிப்பில், விஜய் கார்த்திகேயன் இயக்கத்தில் நடிகர்கள் கிச்சா சுதீப், நவீன் சந்திரா, விக்ராந்த், யோகி பாபு, தீப்ஷிகா மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மார்க்’...
இயக்குநர் பொன் ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள 'கொம்பு சீவி' திரைப்படத்தில் சரத்குமார், சண்முக பாண்டியன் விஜயகாந்த், தார்னிகா, காளி வெங்கட் , முனீஸ்காந்த், ஜார்ஜ் மரியான், சுஜித் சங்கர், கல்கி ராஜா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்...