சென்னை ராஜாஜி அரங்கில் வைக்கப்பட்டுள்ள கருணாநிதி உடலுக்கு பல்வேறு தரப்பினர் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், தனது கட்சி நிர்வாகிகளுடன் வந்து அஞ்சலி செலுத்தினார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கருணாநிதியின் மறைவு வரலாற்றின் முற்றுப்புள்ளி அல்ல, ஒரு கமா தான். உணர்வும், இந்த சூழலும் குரலை உயர்த்த முடியாத நிலைக்கு என்னை ஆளாக்கியுள்ளது. எனக்கும், கருணாநிதிக்கும் இடையேயான உறவு எல்லாவற்றிற்கும் அப்பாற்பட்டது. நாட்டிற்கு ஒரு தலைவராக அவரை இழந்தது போக, தனிப்பட்ட முறையில் வீட்டில் ஒரு பெரியவரை இழந்த உணர்வு எனக்கு இருக்கிறது. அவரது தமிழுக்கு நான் தலை வணங்குகிறேன்.” என்றார்.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் தயாராகி உள்ள 'கருப்பு' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் கோலாகலமாக நடைபெற்றது...
கிருஷ்ண ஜன்மபூமியில் ’கிருஷ்ணாவதாரம்’ திரைப்பட டிரைலர் வெளியீடு ஆன்மிகச் சூழலில் நடைபெற்றது...
ஒரு தீவிரமான சமூக - தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’ படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ளனர்...