மறைந்த திமுக தலைவர் மு.கருணாநிதி உடலுக்கு சினிமா பிரமுகர்கள் பலர் நேரில் அஞ்சலி செலுத்தினார்கள். நேரில் வர முடியாத பலர் சமுக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
அந்த வகையில், பாலிவுட்டின் சூப்பர் ஸ்டார் நடிகர் அமிதாப் பச்சன், ட்விட்டர் மூலம் கருணாநிதி மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
அவர் தெரிவித்திருக்கும் இரங்கல் செய்தியில், சிறந்த தலைவராகவும், உறுதியான தலைவராகவும் திகழ்ந்த கருணாநிதியின் ஆத்மா சாந்தியடைய நான் பிரார்த்திக்கிறேன். எனது முதல் தேசிய விருதை நான் அவர் கையில் தான் வாங்கினேன்.
சென்னையில் தேசிய விருது வழங்கும் விழா நடந்த போது அவர் தான் தமிழகத்தின் முதல்வராக இருந்தார். அப்போது அவர் கையில் விருது வாங்கியதில் நான் மகிழ்ந்தேன், என்று தெரிவித்துள்ளார்.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் தயாராகி உள்ள 'கருப்பு' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் கோலாகலமாக நடைபெற்றது...
கிருஷ்ண ஜன்மபூமியில் ’கிருஷ்ணாவதாரம்’ திரைப்பட டிரைலர் வெளியீடு ஆன்மிகச் சூழலில் நடைபெற்றது...
ஒரு தீவிரமான சமூக - தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’ படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ளனர்...