5 முறை தமிழகத்தின் முதல்வராக பதவி வகித்தவரும், திமுக தலைவருமான முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் மு.கருணாநிதியின் உடல் 21 குண்டுகள் முழங்க மெரீனா கடற்கரையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
கடந்த ஒன்றரை வருடங்களாக வயது முதிர்வு கராணமாக உடல் நிலை பாதிக்கப்பட்டிருந்த கருணாநிதி, கட்சி பணிகளில் இருந்து ஒதுங்கி வீட்டில் ஓய்வு எடுத்து வந்த நிலையில், கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு உடல் நிலை பாதிப்பால் சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து 11 நாட்கள் சிகிச்சை பெற்று வந்தவர், நேற்று மாலை 6.10 மணிக்கு சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.
கருணாநிதியின் இறப்பால் தமிழகமே கண்ணீரில் தத்தளிக்க, அவரது உடல் அடக்கம் செய்வதற்கு மெரீனா கடற்கரையில் இடம் தர முடியாது, என்று தமிழக அரசின் அறிவிப்பு திமுக தொண்டர்களை மட்டும் இன்றி ஒட்டு மொத்த தமிழர்களையும் வேதனை அடைய செய்தது.
சிறு வயது முதலே போராட்டத்தையே வாழ்க்கையாக மாற்றிக் கொண்ட கருணாநிதியின் வழி அந்தவர்கள் மட்டும் என்ன சும்மா இருப்பார்களா, சட்ட ரீதியிலான போராட்டத்தை கையில் எடுத்தவர்கள், அதில் வெற்றியும் பெற்றுவிட்டார்கள்.
இட ஒத்துக்கீடுக்காக பல போராட்டங்களை நிகழ்த்திய கருணாநிதி, இறுதியாக தனக்கான ஆறடி நிலத்திற்காகவும் போராடி அதில் வெற்றி பெற்றதால், இறப்பிலும் போராடி ஜெயித்த ஓரே தலைவர் என்ற பெருமையோடு இறுதி ஊர்வலத்தை தொடங்கினார்.
கடலென திரண்ட தொண்டர்கள் கூட்டத்தில் மிதந்தவாறும், அவர்களது கண்ணீரில் நனைந்தவாறும் அண்ணாவை நோக்கி சென்ற கலைஞர், சுமார் 6.15 மணிக்கு அண்ணா நினைவிடம் வந்தடைந்தார். பிறகு அவரது குடும்பத்தார், அமைச்சர்கள் உள்ளிட்டோர் இருதி அஞ்சலி செலுத்தினார்கள். பிறகு அவருக்காக தயார் செய்யப்பட்ட பேழையில் அவருக்காக தயார் செய்யப்பட்ட பேழையில் அவரது உடல் வைக்கப்பட்டது.
பிறகு குழியில் அவரது பேழை இறக்கப்பட்டவுடன், 21 குண்டுகள் முழங்க கருணாநிதி உடல் புதைக்கப்பட்டது.
“ஒய்வெடுக்காமல் உழைத்தவன் இதோ ஓய்வு கொண்டிருக்கிறான்”
பிடிஜி யுனிவர்சல் (BTG Universal) நிறுவனத்தின் மூன்றாவது படைப்பாக, நடிகர் அருண் விஜய் நடிப்பில், ’மான் கராத்தே’ இயக்குநர் கிரிஷ் திருக்குமரன் இயக்கத்தில், ஸ்டைலீஷ் ஆக்சன் படமாக உருவாகியுள்ள திரைப்படம் ’ரெட்ட தல’...
சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் மற்றும் கிச்சா கிரியேஷன் தயாரிப்பில், விஜய் கார்த்திகேயன் இயக்கத்தில் நடிகர்கள் கிச்சா சுதீப், நவீன் சந்திரா, விக்ராந்த், யோகி பாபு, தீப்ஷிகா மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மார்க்’...
இயக்குநர் பொன் ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள 'கொம்பு சீவி' திரைப்படத்தில் சரத்குமார், சண்முக பாண்டியன் விஜயகாந்த், தார்னிகா, காளி வெங்கட் , முனீஸ்காந்த், ஜார்ஜ் மரியான், சுஜித் சங்கர், கல்கி ராஜா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்...