தென்னிந்திய நடிகர் சங்கத்தின் மூத்த உறுப்பினரும் மூத்த நாடக நடிகருமான எ.ஜெயராமன் நேற்று ( ஆகஸ்ட் 7) இரவு சென்னையில் காலமானார். அவருக்கு வயது 84.
50 ஆண்டுக்கும் மேல் நாடக நடிகராக வாழ்க்கை பயணம் நடத்திய இவர் தேவி நாடக சபா மற்றும் ஆர்.எஸ்.மனோகரின் நேஷ்னல் தியேட்டரில் நடிகராக பணியாற்றிய கலைஞர் ஆவார். அவருக்கு நடிகர் சங்க நிர்வாகிகள் தலைவர் எம்.நாசர், துணை தலைவர் கருணாஸ் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கோவை சரளா, சங்கீதா, பசுபதி, விக்னேஷ், ஹேமச்சந்திரன், ஸ்ரீமன், ஏ.எல்.உதயா ஆகியோர் தேனாம்பேட்டையிலுள்ள அவரது இல்லத்துக்கு சென்று இறுதி மரியாதை செலுத்தினர்.
பிடிஜி யுனிவர்சல் (BTG Universal) நிறுவனத்தின் மூன்றாவது படைப்பாக, நடிகர் அருண் விஜய் நடிப்பில், ’மான் கராத்தே’ இயக்குநர் கிரிஷ் திருக்குமரன் இயக்கத்தில், ஸ்டைலீஷ் ஆக்சன் படமாக உருவாகியுள்ள திரைப்படம் ’ரெட்ட தல’...
சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் மற்றும் கிச்சா கிரியேஷன் தயாரிப்பில், விஜய் கார்த்திகேயன் இயக்கத்தில் நடிகர்கள் கிச்சா சுதீப், நவீன் சந்திரா, விக்ராந்த், யோகி பாபு, தீப்ஷிகா மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மார்க்’...
இயக்குநர் பொன் ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள 'கொம்பு சீவி' திரைப்படத்தில் சரத்குமார், சண்முக பாண்டியன் விஜயகாந்த், தார்னிகா, காளி வெங்கட் , முனீஸ்காந்த், ஜார்ஜ் மரியான், சுஜித் சங்கர், கல்கி ராஜா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்...