தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக் பாஸ் சீசன் 2-வில் சில போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டு வரும் நிலையில், விரைவில் புதிய போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டுக்குள் வரப்போகும் வைல்ட் கார்ட் ரவுண்ட் நடக்க இருக்கிறது.
இந்த நிலையில், தற்போதைய போட்டியாளர்களில் சீனியர் நடிகை என்றால் அது மும்தாஜ் தான். அதனால் தான் என்னவோ, அவர் மற்றவர்களிடம் கொஞ்சம் ஓவராகவே நடந்துக் கொள்கிறார். ஆனால், இன்றைய போட்டியில் நிலமை தலைகிழாக மாறப்போகிறது என்பது தற்போது வெளியாகியுள்ள புரோமோவில் தெரிவிகிறது.
பிக் பாஸ் வீட்டின் வெகுளிப்புள்ள என்று பெயர் எடுத்திருக்கும் சென்ராயனின் உண்மையான குணம் அதுவல்ல, அவர் நடிக்கிறார், என்று பலர் குற்றம் சாட்டி வரும் நிலையில், சென்ராயன் மும்தாஜை போட்டி தாக்கும் புரோமோ தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்றைய எப்பிசோட்டில் மும்தாஜை சென்ராயன் எடா கூடமாக பேசுவதோடு, தொடர்ந்து வெளுத்து வாங்குகிறார். அதை கேட்டு விசில் அடிக்கும் மஹத், தல நீ பேசு தல...என்று உசுப்பேத்துகிறார். ஆனால், மும்தாஜ் மற்றும் வைஷ்ணவி பெரும் கோபத்தோடு முகத்தை வைத்துக்கொண்டு சென்ராயனை முறைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இதனால், இன்றைய பிக் பாஸ் எப்பிசோட்டில் பெரிய கலவரம் ஏற்படப்போவது நிச்சயம் என்பது மட்டும் தெரிகிறது.
பிடிஜி யுனிவர்சல் (BTG Universal) நிறுவனத்தின் மூன்றாவது படைப்பாக, நடிகர் அருண் விஜய் நடிப்பில், ’மான் கராத்தே’ இயக்குநர் கிரிஷ் திருக்குமரன் இயக்கத்தில், ஸ்டைலீஷ் ஆக்சன் படமாக உருவாகியுள்ள திரைப்படம் ’ரெட்ட தல’...
சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் மற்றும் கிச்சா கிரியேஷன் தயாரிப்பில், விஜய் கார்த்திகேயன் இயக்கத்தில் நடிகர்கள் கிச்சா சுதீப், நவீன் சந்திரா, விக்ராந்த், யோகி பாபு, தீப்ஷிகா மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மார்க்’...
இயக்குநர் பொன் ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள 'கொம்பு சீவி' திரைப்படத்தில் சரத்குமார், சண்முக பாண்டியன் விஜயகாந்த், தார்னிகா, காளி வெங்கட் , முனீஸ்காந்த், ஜார்ஜ் மரியான், சுஜித் சங்கர், கல்கி ராஜா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்...