Latest News :

அம்மா ஆவதற்கு முன்பாக பாட்டியாகும் சமந்தா!
Thursday August-09 2018

திருமணத்திற்குப் பிறகும் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழி சினிமாவிலும் பிஸியான ஹீரோயினாக வலம் வரும் சமந்தாவின் நடிப்பில் விரைவில் ‘சீமராஜா’ வெளியாக உள்ள நிலையில், ‘யு-டர்ன்’, ‘சூப்பர் டீலக்ஸ்’ என இரண்டு படங்களிலும் நடித்து வருகிறார்.

 

இதேபோல் தெலுங்கு சினிமாவிலும் சில படங்களில் நடித்து வரும் சமந்தா, கையில் தற்போது அரை டஜன் படங்கள் இருக்கிறது.

 

இந்த நிலையில், புதிய படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கும் சமந்தா, அதில் 80 வயதுள்ள மூதாட்டி வேடத்தில் நடிக்கப் போகிறாராம். கொரீயன் படத்தின் ரீமேக்கான இப்படத்தில் சமந்தா நடிக்க இருக்கும் வேடம் ரொம்பவே முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தாலும், அவருக்கு இது செட்டாகுமா? என்ற பெரும் கேள்வி எழுந்திருப்பதோடு, எதற்கு இந்த தேவையில்லாத வேலை, என்றும் சிலர் கேட்டுள்ளாரக்ளாம்.

 

யார் என்ன சொன்னாலும், எதை கேட்டாலும், இந்த வேடத்தில் நடிப்பதில் உறுதியாக இருக்கும் சமந்தா, இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை விரைவில் வெளியிடப் போகிறாராம்.

 

நாகை சைதன்யாவை திருமணம் செய்துக் கொண்டவர் இன்னும் சில ஆண்டுகளில் அம்மா ஆவார் என்று பார்த்தால், இப்படி பாட்டியாக முடிவு செய்துவிட்டாரே!

Related News

3230

மார்ச் 6 ஆம் தேதி வெளியாகும் ‘யார்ரா அந்த பையன் நான் தான் அந்த பையன்’!
Wednesday March-04 2026

அறிமுக இயக்குநர் பால்ராஜ் எழுதி இயக்கி, கதையின் நாயகனாக நடித்திருப்பதோடு, பி...

5 இயக்குநர்கள் இயக்கியிருக்கும் ‘வெளவல்ஸ்’ (Vowels)!
Tuesday March-03 2026

காதலின் பல்வேறு பரிமாணங்களை பேசும் தனித்துவமான படம் ‘வெளவல்ஸ்’ (Vowels)...

சுரேஷ் சங்கையாவின் படத்தில் நடித்தது பாக்கியமாக பார்க்கிறேன் - யோகி பாபு நெகிழ்ச்சி
Tuesday March-03 2026

ஜியோ ஹாட் ஸ்டார் வழங்க ஆர். ரமேஷ் பாபு மற்றும் ஜெகன் பாஸ்கரன் இணைந்து தயாரித்து இயக்குநர் சுரேஷ் சங்கையா இயக்கியுள்ள திரைப்படம் "கெணத்த காணோம்...

Recent Gallery