தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நயந்தாரா, சுமார் அரை டஜன் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வருவதோடு, அஜித், கமல், சிரஞ்சீவி போன்ற முன்னணி ஹீரோக்களின் படங்களிலும் நடித்து வருகிறார்.
அதே சமயம், கிராமத்து பெண், கல்லூரி மாணவி, குடும்ப பெண், சிபிஐ அதிகாரி, ஐஏஎஸ் அதிகாரி என அனைத்துவிதமான கதாபாத்திரங்களிலும் நடித்திருக்கும் நயந்தாரா, தற்போது ஒரு படத்தில் பேய்கள் பற்றி ஆராய்ச்சி செய்யும் ‘கோஸ்ட் இன்வெஸ்டிகேட்டர்’ என்ற வேடத்தில் நடித்து வருகிறாராம்.
லட்சுமி, மா போன்ற குறும்படங்களை இயக்கிய சர்ஜுன் இயக்கும் படத்தில் தான் நயந்தாரா, இந்த வித்தியாசமான வேடத்தில் நடிக்கிறாராம். விரைவில் படப்பிடிப்பு தொடங்க இருக்கும் இப்படத்திற்காக சென்னையில் பிரம்மாண்டமான பேய் பங்களா ஒன்று உருவாக்கப்பட்டு வருகிறது.
பிடிஜி யுனிவர்சல் (BTG Universal) நிறுவனத்தின் மூன்றாவது படைப்பாக, நடிகர் அருண் விஜய் நடிப்பில், ’மான் கராத்தே’ இயக்குநர் கிரிஷ் திருக்குமரன் இயக்கத்தில், ஸ்டைலீஷ் ஆக்சன் படமாக உருவாகியுள்ள திரைப்படம் ’ரெட்ட தல’...
சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் மற்றும் கிச்சா கிரியேஷன் தயாரிப்பில், விஜய் கார்த்திகேயன் இயக்கத்தில் நடிகர்கள் கிச்சா சுதீப், நவீன் சந்திரா, விக்ராந்த், யோகி பாபு, தீப்ஷிகா மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மார்க்’...
இயக்குநர் பொன் ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள 'கொம்பு சீவி' திரைப்படத்தில் சரத்குமார், சண்முக பாண்டியன் விஜயகாந்த், தார்னிகா, காளி வெங்கட் , முனீஸ்காந்த், ஜார்ஜ் மரியான், சுஜித் சங்கர், கல்கி ராஜா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்...