விஜய் மூன்று வேடங்களில் நடித்து கடந்த தீபாவளியன்று வெளியான ‘மெர்சல்’ தமிழகம் மட்டும் இன்றி இந்தியாவின் பல மாநிலங்களில் பெரிய வெற்றி பெற்றதோடு, சில வெளிநாடுகளிலும் வசூலில் சாதனை புரிந்தது.
வியாபர ரீதியாக வெற்றி பெற்றதோடு, படத்தில் இடம்பெற்ற அரசியல் வசனங்களாலும் படம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.
மேலும், படம் ரிலீஸின் போதும், வெளியாவதற்கு முன்பாக சமூக வலைதளங்களிலும் பல்வேறு சாதனைகளை புரிந்ததோடு, ரிலிஸிற்கு பிறகு பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்று பல விருதுகளையும் அள்ளியது.
தற்போது சாதனைகளை தொடர்ந்து நிகழ்த்திக் கொண்டிருக்கும் ‘மெர்சல்’ மேலும் ஒரு புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளது.
சீனாவில் இந்திய திரைப்படங்கள் வெளியானாலும் பெரும்பாலும் அவை இந்திப் படங்களாகவே இருந்த நிலையில், சீனா நாட்டில் வெளியாகும் முதல் தமிழ்ப் படம் என்ற சாதனையை விஜயின் ‘மெர்சல்’ நிகழ்த்தியுள்ளது.
ஆம், சீனாவில் மெர்சல் விரைவில் வெளியாகப் போகிறது. இதற்கான உரிமையை எச்.ஜி.சி என்ற நிறுவனம் பெற்றுள்ளது. சீன மொழியில் டப் செய்யப்பட்டு இந்த ஆண்டு இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு தொடங்கத்தில் ‘மெர்சல்’ படத்தை இந்நிறுவனம் வெளியிட உள்ளது.
பிடிஜி யுனிவர்சல் (BTG Universal) நிறுவனத்தின் மூன்றாவது படைப்பாக, நடிகர் அருண் விஜய் நடிப்பில், ’மான் கராத்தே’ இயக்குநர் கிரிஷ் திருக்குமரன் இயக்கத்தில், ஸ்டைலீஷ் ஆக்சன் படமாக உருவாகியுள்ள திரைப்படம் ’ரெட்ட தல’...
சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் மற்றும் கிச்சா கிரியேஷன் தயாரிப்பில், விஜய் கார்த்திகேயன் இயக்கத்தில் நடிகர்கள் கிச்சா சுதீப், நவீன் சந்திரா, விக்ராந்த், யோகி பாபு, தீப்ஷிகா மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மார்க்’...
இயக்குநர் பொன் ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள 'கொம்பு சீவி' திரைப்படத்தில் சரத்குமார், சண்முக பாண்டியன் விஜயகாந்த், தார்னிகா, காளி வெங்கட் , முனீஸ்காந்த், ஜார்ஜ் மரியான், சுஜித் சங்கர், கல்கி ராஜா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்...