திமுக தலைவர் மு.கருணாநிதி இழப்பு தமிழகத்தின் மிகப்பெரிய இழப்பானதோடு, தமிழகத்தின் கடைசி தலைவரின் இழப்பாகவும் கருதப்படுகிறது.
இந்த நிலையில், கருணாநிதியின் வாழ்க்கை திரைப்படமாக எடுக்கப்பட்டால் கருணாநிதி வேடத்தில் நடிக்க தான் ரெடியாக இருப்பதாக நடிகர் பிரகாஷ்ராஜ் தெரிவித்திருக்கிறார்.
மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘இருவர்’ படத்தில் ஏற்கனவே கருணாநிதி வேடத்தில் நடித்திருக்கும் பிரகாஷ்ராஜ், கருணாநிதி குறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசியிருப்பதோடு, கருணாநிதி போன்ற ஒரு தலைவர் மீண்டும் தமிழகத்திற்கு கிடைக்கப் போவதில்லை என்றும், தமிழகத்தில் ஜனநாயகத்தை ஏற்படுத்தியவர் அவர் தான் என்றும் கூறியுள்ளார்.

மேலும், கருணாநிதியின் வாழ்க்கை திரைப்படமாக எடுக்கப்பட்டால் அதில் நான் மீண்டும் கருணாநிதி வேடத்தில் நடிக்க விரும்புகிறேன், என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.
அறிமுக இயக்குநர் பால்ராஜ் எழுதி இயக்கி, கதையின் நாயகனாக நடித்திருப்பதோடு, பி...
காதலின் பல்வேறு பரிமாணங்களை பேசும் தனித்துவமான படம் ‘வெளவல்ஸ்’ (Vowels)...
ஜியோ ஹாட் ஸ்டார் வழங்க ஆர். ரமேஷ் பாபு மற்றும் ஜெகன் பாஸ்கரன் இணைந்து தயாரித்து இயக்குநர் சுரேஷ் சங்கையா இயக்கியுள்ள திரைப்படம் "கெணத்த காணோம்...