Latest News :

நடிகர் விக்ரமின் மகன் துருவ் கைது!
Sunday August-12 2018

கார் ஓட்டி விபத்து ஏற்படுத்திய வழக்கில் நடிகர் விக்ரமின் மகன் துருவ் கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

 

நடிகர் விக்ரமின் மகன் துருவ், பாலா இயக்கத்தில் உருவாகி வரும் ‘வர்மா’ என்ற படத்தில் ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

 

இந்த நிலையில், இன்று துருவ் ஓட்டிய கார் சென்னை தேனாம்பேட்டை அருகே ஏற்படுத்திய விபத்தில் 3 ஆட்டோக்கள் சேதமடைந்ததோடு, 3 பேர் படு காயம் அடைந்துள்ளனர். இதையடுத்து போலீசாரல் கைது செய்யப்பட்ட துருவ், விசாரணைக்கு பிறகு போலீசாரின் சொந்த ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

 

இது குறித்து நடிகர் விக்ரம் தரப்பில் அளிக்கப்பட்டுள்ள விளக்கத்தில், ”நடிகர் விக்ரம் மகன் துருவ், அவரது நண்பரின் வீட்டிற்கு சென்று விட்டு இன்று அதிகாலையில் வீட்டிற்கு திரும்பி வந்துகொண்டிருந்த போது எதிர்பாராமல் ஆட்டோவுடன் மோதியதில் விபத்து ஏற்பட்டது. இதில் காருக்கும், ஆட்டோவிற்கும் சேதம் ஏற்பட்டிருக்கிறது.

 

விபத்தில் பாதிக்கப்பட்டவரை உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர் சிகிச்சை முடிந்து நலமுடன் வீடு திரும்பிவிட்டார்.

 

இது கவனக்குறைவு காரணமாக ஏற்பட்ட விபத்து மட்டுமே என்பதை மிகவும் தாழ்மையுடன் தெரிவித்து கொள்கிறோம்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News

3242

மார்ச் 6 ஆம் தேதி வெளியாகும் ‘யார்ரா அந்த பையன் நான் தான் அந்த பையன்’!
Wednesday March-04 2026

அறிமுக இயக்குநர் பால்ராஜ் எழுதி இயக்கி, கதையின் நாயகனாக நடித்திருப்பதோடு, பி...

5 இயக்குநர்கள் இயக்கியிருக்கும் ‘வெளவல்ஸ்’ (Vowels)!
Tuesday March-03 2026

காதலின் பல்வேறு பரிமாணங்களை பேசும் தனித்துவமான படம் ‘வெளவல்ஸ்’ (Vowels)...

சுரேஷ் சங்கையாவின் படத்தில் நடித்தது பாக்கியமாக பார்க்கிறேன் - யோகி பாபு நெகிழ்ச்சி
Tuesday March-03 2026

ஜியோ ஹாட் ஸ்டார் வழங்க ஆர். ரமேஷ் பாபு மற்றும் ஜெகன் பாஸ்கரன் இணைந்து தயாரித்து இயக்குநர் சுரேஷ் சங்கையா இயக்கியுள்ள திரைப்படம் "கெணத்த காணோம்...

Recent Gallery