Latest News :

ஷாம் ஏரியாவில் வலம் வரும் ‘சர்கார்’ விஜய்!
Sunday August-12 2018

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக மட்டும் இன்றி பெரிய ரசிகர்கள் பட்டாளம் கொண்ட மாஸ் ஹீரோவாக இருப்பவர் விஜய், அதே தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களின் பட்டியலில் இடம் பிடிப்பதற்கான முயற்சியில் இருப்பவர் ஷாம். தற்போது இவர்கள் இருவருக்கும் ஒரு ஒற்றுமை ஏற்பட்டிருக்கிறது.

 

ஷாம் நடிப்பில் தற்போது உருவாகி வரும் ‘காவியன்’ திரைப்படம் முழுக்க முழுக்க அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரத்தில் எடுக்கப்பட்டுள்ளது. சூதாட்ட நகரம் என்று அழைக்கப்படும் அந்நகரம் மதுரையை போல 24 மணி நேரமும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருப்பதோடு, பார்ப்பதற்கு அழகாகவும் இருக்கும். அப்படிப்பட்ட ஒரு இடத்தில் முழு படப்பிடிப்பும் நடத்திருப்பதோடு, பல ஹாலிவுட் நடிகர்கள் நடித்திருப்பதால் ‘காவியன்’ ஹாலிவுட் படம் போல வந்திருக்கிறதாம்.

 

Kaaviyan

 

இந்த நிலையில், ‘காவியன்’ படப்பிடிப்பு நடத்தப்பட்ட அதே லாஸ் வேகாஸ் பகுதிகளில் விஜயின் ‘சர்கார்’ படத்தின் படப்பிடிப்பும் நடந்துக்கொண்டிருக்கிறது. 

 

2எம் சினிமாஸ் கே.வி.சபரீஷ் தயாரிப்பில் சாரதி இயக்கியிருக்கும் இப்படம் விரைவில் வெளியாக உள்ளது.

Related News

3245

மார்ச் 6 ஆம் தேதி வெளியாகும் ‘யார்ரா அந்த பையன் நான் தான் அந்த பையன்’!
Wednesday March-04 2026

அறிமுக இயக்குநர் பால்ராஜ் எழுதி இயக்கி, கதையின் நாயகனாக நடித்திருப்பதோடு, பி...

5 இயக்குநர்கள் இயக்கியிருக்கும் ‘வெளவல்ஸ்’ (Vowels)!
Tuesday March-03 2026

காதலின் பல்வேறு பரிமாணங்களை பேசும் தனித்துவமான படம் ‘வெளவல்ஸ்’ (Vowels)...

சுரேஷ் சங்கையாவின் படத்தில் நடித்தது பாக்கியமாக பார்க்கிறேன் - யோகி பாபு நெகிழ்ச்சி
Tuesday March-03 2026

ஜியோ ஹாட் ஸ்டார் வழங்க ஆர். ரமேஷ் பாபு மற்றும் ஜெகன் பாஸ்கரன் இணைந்து தயாரித்து இயக்குநர் சுரேஷ் சங்கையா இயக்கியுள்ள திரைப்படம் "கெணத்த காணோம்...

Recent Gallery