ஒரு வருடத்திற்கு முன்பு உடல் எடையை 100 கிலோவை தாண்டிய நிலையில் இருந்த இசையமைப்பாளர் டி.இமான், தற்போது 75 கிலோ உடல் எடைக்கு மாறியதோடு, சுமார் 6 மாதத்தில் மட்டும் 42 கிலோ உடல் எடையை குறைத்திருக்கிறார்.
இது எப்படி நடந்தது! என்று பல ஆச்சரியப்படுவதற்கிடையே, இமான் உடல் எடை குறைப்புக்கு பின்னாள் மருத்தும் இருக்கிறது என்றும் தகவல் வெளியானது. அதாவது வெளிநாட்டில் இருந்து வரவைக்கப்பட்ட ஊழியை போட்டு தான் அவர் உடல் எடையை குறைத்ததாக கூறப்பட்டது. இந்த தகவல் சமூக வலைதளங்களிலும் வேகமாக பரவி வந்தது. ஆனால், இது குறித்து இமான் தரப்பில் எந்த விளக்குமும் கொடுக்கப்படவில்லை.
இந்த நிலையில், தனது உடல் எடை குறைப்பு ரகசியத்தை வெளியிட்டிருக்கும் டி.இமான், தனது உடை குறைப்பை தொடர்ந்து எழுந்த சர்ச்சைக்கும் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.
ஊசியோ, மருந்தோ என்று எந்தவித மருத்துவத்தை நாடாமல் முழுக்க முழுக்க உடற்பயிற்சி மற்றும் உணவு கட்டுப்பாட்டில் தான் 42 கிலோ உடல் எடையை குறைத்தாராம் டி.இமான்.
இது குறித்து சமூகவலைதள பக்கத்தில் இமான் வெளியிட்டிருக்கும் பதிவில், ”பள்ளியில் படிக்கும்போதே உடம்பை பிட்டாக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால், பள்ளிக்கு செல்வது, மியூசிக் ரெக்கார்டிங் என பிஸியாக இருந்ததால் உடற்பயிற்சி செய்வதற்கான நேரம் கிடைக்கவில்லை. அதே சமயம் ஒரே இடத்தில் பல மணி நேரங்கள் அமர்ந்து பணியாற்றியதால் உடல் பருமன் அதிகரித்துவிட்டது.
கடந்த ஒரு வருடமாக தொடர்ந்து உடற்பயிற்சியை ஒழுங்காக செய்வதோடு, உணவு கட்டுப்பாட்டையும் கடைப்பிடிப்பதால், 117 கிலோவாக இருந்த நான் தற்போது 42 கிலோ எடை குறைந்து 75 கிலோவுக்கு மாறிவிட்டேன்.” என்று தெரிவித்துள்ளார்.
பிடிஜி யுனிவர்சல் (BTG Universal) நிறுவனத்தின் மூன்றாவது படைப்பாக, நடிகர் அருண் விஜய் நடிப்பில், ’மான் கராத்தே’ இயக்குநர் கிரிஷ் திருக்குமரன் இயக்கத்தில், ஸ்டைலீஷ் ஆக்சன் படமாக உருவாகியுள்ள திரைப்படம் ’ரெட்ட தல’...
சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் மற்றும் கிச்சா கிரியேஷன் தயாரிப்பில், விஜய் கார்த்திகேயன் இயக்கத்தில் நடிகர்கள் கிச்சா சுதீப், நவீன் சந்திரா, விக்ராந்த், யோகி பாபு, தீப்ஷிகா மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மார்க்’...
இயக்குநர் பொன் ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள 'கொம்பு சீவி' திரைப்படத்தில் சரத்குமார், சண்முக பாண்டியன் விஜயகாந்த், தார்னிகா, காளி வெங்கட் , முனீஸ்காந்த், ஜார்ஜ் மரியான், சுஜித் சங்கர், கல்கி ராஜா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்...