கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் தொலைக்காட்சி நிகழ்ச்சியின் இரண்டாம் சீசன், முதல் சீசனைப் போல ரசிகர்களிடம் வரவேற்பு பெறவில்லை என்றாலும், தற்போது பிக் பாஸ் வீட்டில் பல பரபரப்பான சம்பவங்கள் நடைபெற்று வருகிறது.
காதல், அழுகை, வாய் சண்டை என்று இருந்த போட்டியாளர்கள் தற்போது அடிதடி சண்டையிலும் இறங்கிவிட்டார்கள்.
இன்று வெளியாகியிருக்கும் புதிய புரோமோவில் மஹத்துக்கும், டேனிக்கும் இடையே அடிதடி சண்டை நடக்கிறது.
பிக் பாஸ் கொடுக்கப்பட்ட டாஸ்க்கின்படி மஹத்தும், டேனியும் எதிர் எதிர் அணியில் இருக்கிறார்கள். இடையில் மஹத் செயலால் டேனியல் கோபப்பட இருவருக்கும் சண்டை உருவாக, பக்கத்தில் இருப்பவர்கள் அவர்களை தடுக்கின்றனர்.
இருவருக்கும் ஏற்பட்ட கோபத்தையும், ஆக்ரோஷத்தையும் பார்க்கும் போது, நிச்சயம் இன்றைய எப்பிசோட் ஒரே ஆக்ஷன் படமாக தான் இருக்கும் என்று தெரிகிறது.
பிடிஜி யுனிவர்சல் (BTG Universal) நிறுவனத்தின் மூன்றாவது படைப்பாக, நடிகர் அருண் விஜய் நடிப்பில், ’மான் கராத்தே’ இயக்குநர் கிரிஷ் திருக்குமரன் இயக்கத்தில், ஸ்டைலீஷ் ஆக்சன் படமாக உருவாகியுள்ள திரைப்படம் ’ரெட்ட தல’...
சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் மற்றும் கிச்சா கிரியேஷன் தயாரிப்பில், விஜய் கார்த்திகேயன் இயக்கத்தில் நடிகர்கள் கிச்சா சுதீப், நவீன் சந்திரா, விக்ராந்த், யோகி பாபு, தீப்ஷிகா மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மார்க்’...
இயக்குநர் பொன் ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள 'கொம்பு சீவி' திரைப்படத்தில் சரத்குமார், சண்முக பாண்டியன் விஜயகாந்த், தார்னிகா, காளி வெங்கட் , முனீஸ்காந்த், ஜார்ஜ் மரியான், சுஜித் சங்கர், கல்கி ராஜா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்...