தெலுங்கு சினிமா நடிகையான ஸ்ரீரெட்டி, தனக்கு வாய்ப்பு தருவதாக கூறி தன்னிடம் செக்ஸ் வைத்துக்கொண்டு பிறகு வாய்ப்பு கொடுக்காமல் ஏமாற்றியதாக தெலுங்கு சினிமா பிரபலங்கள் மீது குற்றம் சாட்டினார். மேலும், தன்னை பயன்படுத்திக் கொண்டவர்களின் பட்டியலையும் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.
தற்போது சென்னையில் வசித்து வரும் ஸ்ரீரெட்டி, இனி தெலுங்கு திரைப்படங்களில் நடிக்கப் போவதில்லை என்று அறிவித்ததோடு, தமிழ் சினிமாவில் நடிக்கும் முடிவில் இருப்பதோடு, தமிழ் சினிமா பிரபலங்களில் தன்னை யார் யார் ஏமாற்றினார்கள்? என்ற பட்டியலையும் வெளியிட்டுள்ளார்.
அவர் வெளியிட்ட முதல் பட்டியலில் இயக்குநர்கள் ஏ.ஆர்.முருகதாஸ், சுந்தர்.சி, லாரன்ஸ், ஸ்ரீகாந்த் ஆகியோர் இடம்பெற்று இருந்தார்கள்.
இந்த நிலையில், ஸ்ரீரெட்டிக்கு ஏகப்பட்ட தமிழ்ப் பட வாய்ப்புகள் வருகிறதாகவும், அதில் விஜயின் 63 வது படமும் ஒன்று என்றும் தகவல் வெளியாகியுள்ளது. அட்லீ இயக்க இருக்கும் இந்த படத்தில் நடிக்க ஸ்ரீரெட்டிக்கு வாய்ப்பு கிடைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிடிஜி யுனிவர்சல் (BTG Universal) நிறுவனத்தின் மூன்றாவது படைப்பாக, நடிகர் அருண் விஜய் நடிப்பில், ’மான் கராத்தே’ இயக்குநர் கிரிஷ் திருக்குமரன் இயக்கத்தில், ஸ்டைலீஷ் ஆக்சன் படமாக உருவாகியுள்ள திரைப்படம் ’ரெட்ட தல’...
சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் மற்றும் கிச்சா கிரியேஷன் தயாரிப்பில், விஜய் கார்த்திகேயன் இயக்கத்தில் நடிகர்கள் கிச்சா சுதீப், நவீன் சந்திரா, விக்ராந்த், யோகி பாபு, தீப்ஷிகா மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மார்க்’...
இயக்குநர் பொன் ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள 'கொம்பு சீவி' திரைப்படத்தில் சரத்குமார், சண்முக பாண்டியன் விஜயகாந்த், தார்னிகா, காளி வெங்கட் , முனீஸ்காந்த், ஜார்ஜ் மரியான், சுஜித் சங்கர், கல்கி ராஜா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்...