ரஜினிகாந்த் நடிப்பில், ரஞ்சித் இயக்கும் ‘காலா’ படத்தில் சமுத்திரக்கனி, அருள்தாஸ் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை பூந்தமல்லி அருகே நடைபெற்று வருகிறது. இந்த படப்பிடிப்பில் ரஜினி முன்னிலையில் அருள்தாஸ் மற்றும் குழுவினர் பேசிக்கொண்டிருப்பது போலவும், அப்போது ஜீப் ஒன்று வேகமாக வருவது போன்றும் காட்சி படமாக்கப்பட்டது. அப்போது வேகமாக வந்த ஜீப், எதிர்பாரதவிதமாக அருள்தாஸ் மீது மோதியதில், அவரது இடது கால் விரல்கள் மீது ஜீப்பியின் டயர் ஏறி இறங்கியது. இதனால் அவர் வலியால் துடித்தார்.
உடனே படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு, அவரை அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பதாக கூறியுள்ளனர். இதையடுத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதோடு, 10 நாட்கள் ஓய்வு எடுக்க வேண்டும் என்று மருத்துவர் கூறியுள்ளனர்.
விபத்து ஏற்பட்ட அருள்தாஸ், ‘நான் மகான் அல்ல’, ‘நீர்ப்பறவை’, ‘சூது கவ்வும்’, ‘பாபநாசம்’ உள்ளிட்ட பல படங்களில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்திருக்கிறார்.
ஏற்கனவே காலா படப்பிடிப்பு விபத்து ஏற்பட்டு ஒருவர் உயிரிழந்த நிலையில், தற்போது மீண்டும் விபத்து ஏற்பட்டிருப்பது படக்குழுவினரை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்கள் பட்டியலில் இருந்து, தவிர்க்க முடியாத ஹீரோவாக உருவெடுத்திருக்கும் அர்ஜூன் தாஸ், தனது கதை தேர்வு மூலம் ரசிகர்களை வியக்க வைத்திருக்கிறார்...
இயக்குநர் ஷெரீஃப் தனது முதல் படமான ‘ரணம் அறம் தவறேல்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, இதயபூர்வமாக கற்பனை செய்த கதையை, தயாரிப்பாளர் ஜெய் கிரண் (ஆதிமூலம் கிரியேஷன்ஸ்) உறுதியுடன் கையில் எடுத்ததின் விளைவாக உருவானது ‘காந்தி கண்ணாடி’...
விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன்ஸ் தயாரிப்பில் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கும் சக்தி திருமகன் படத்தின் முன் வெளியீட்டு விழா 10...