பல வெற்றிப் படங்களை விநியோகம் செய்து வருவதோடு பல படங்களை தயாரித்தும் வரும் ஆரா சினிமாஸ் தயாரிப்பில் உருவாகும் படம் ‘அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா’. விளம்பர உலகில் பிரபலமானவராக திகழும் அவினாஷ் ஹரிஹரன் இப்படத்தை இயக்குகிறார்.
இப்படத்தில் ஹீரோவாக வீரா நடிக்கிறார். ‘ராஜதந்திரம்’ படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த வீரா, அப்படத்திற்கு பிறகு மீண்டும் ஒரு நல்ல படத்தில் நடிக்கிறோம் என்பதால் ரொம்பவே குஷியாக இருக்கிறாராம். ’குக்கூ’ பட நாயகி மாளவிகா நாயர் ஹீரோயினாக நடிக்கும் இப்படத்தில், பசுபதி, ரோபோ ஷங்கர், நான் கடவுள் ராஜேந்திரன், சேத்தன், ஷா ரா ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.
மெட்லி ப்ளூஸ் இசையமைக்கும் இப்படத்திற்கு சுதர்சன் ஸ்ரீனிவாசன் ஒளிப்பதிவு செய்ய, பிரவீன் ஆண்டனி படத்தொகுப்பு செய்கிறார். டான் அசோக் வசனம் எழுத, எட்வர்ட் கலைமணி கலையை நிர்மாணிக்கிறார். விக்னேஷ் சிவன், விவேக், முத்தமிழ் ஆகியோர் பாடல்கள் எழுதுகிறார்கள். திலிப் சுப்பராயண் சண்டைப்பயிற்சி அமைக்கிறார். தஸ்தா நடனம் அமைக்கிறார்.
முடியும் தருவாயில் உள்ள இப்படத்தின் டீசர் விரைவில் வெளியாக உள்ள நிலையில், இப்படம் குறித்து கேள்விப்பட்ட கிளாப் போர்டு சத்தியமூர்த்தி இப்படத்தின் திரையரங்கு விநியோக உரிமையை வாங்கியுள்ளார்.
இம்மாதம் இறுதியில் அல்லது செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் வெளியாக உள்ள இப்படம் ரசிகர்களுக்கு பிடித்த படமாக நிச்சயம் இருக்கும், என்று படத்தின் தயாரிப்பாளர் காவ்யா வேணுகோபால் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஜியோ ஹாட்ஸ்டார் ஸ்பெஷலாக வெளியாகி இருக்கும் இணையத் தொடர் ‘குட் வொய்ஃப்’...
அஸ்யூர் பிலிம்ஸ் மற்றும் ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், சக்தி பிலிம் ஃபேக்டரி வெளியீட்டில், அறிமுக இயக்குநர் சண்முகபிரியன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, சுஷ்மிதா பட், மீனாட்சி தினேஷ், அருள்தாஸ், ரமேஷ் திலக், முருகானந்தம் உள்ளிட்ட பலரது நடிப்பில் வெளியான 'லவ் மேரேஜ்' திரைப்படம் - ரசிகர்களின் பேராதரவுடன் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
தன்வீர் தயானந்த யோகி ஜெயந்தி விழா ஜூலை 2 ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிலையில், இவ்விழாவை முன்னிட்டு ’தெய்வீக அற்புதங்களும் மற்றும் ரகசியங்களும்’ என்று சொல்லக்கூடிய ‘டிவைன் மிராக்கல் அண்ட் சீக்ரெட்ஸ்’ (Divine Miracles and Secrets - Part 2) என்ற புத்தகத்தின் இரண்டாம் பாகம் வெளியிடப்பட்டது...