விவாகரத்துக்கு பிறகு நடிப்பதில் தனது முழு கவனத்தையும் செலுத்தி வரும் அமலா பால், தற்போது பாலிவுட்டில் கால் பதிப்பதற்கான முயற்சியில் இருக்கிறார். இதற்கிடையே ‘ஆடை’-க்காக அவர் பல படங்களின் வாய்ப்புகளை நிராகரித்த தகவல் தற்போது வெளியாகியிருக்கிறது.
ஆம், ‘ஆடை’ என்ற தமிழ்ப் படத்தில் நடிப்பதற்காக பிற பட வாய்ப்புகளை அமலா பால் நிராகரித்திருக்கிறார். ‘மேயாத மான்’ படத்தின் மூலம் வெற்றி இயக்குநராக கோடம்பாக்கத்தில் உருவெடுத்திருக்கும் ரத்னகுமார் இயக்கும் இப்படம் உணர்ச்சிகரமான கதைக்களத்தை கொண்ட படமாக உருவாகிறது. எனவே தான் இப்படத்தின் வாய்ப்பை நழுவ விடக்கூடாது என்பதில் அமலா பால் ரொம்பவே கனவமாக இருந்திருக்கிறார்.
பொதுவாக இது போன்ற கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை பீமேல் ஓரியண்ட், பெண்கள் முன்னேற்றத்திற்கான படம் அல்லது சூப்பர் நேச்சுரல் ஹாரர் சினிமா என்று தான் சொல்வார்கள். ஆனால், இந்த படம் மேற்கூறிய எந்த வகையிலும் சாராத, முன் கணிப்புகளை உடைத்தெரியும் உணர்ச்சிக்கரமான பரபரப்பான கதையின் திரைவடிவம் என்று சொல்லப்படுகிறது.
இப்படத்திற்கான பிற நடிகர் நடிகைகள் தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது. விரைவில் படம் குறித்த முழு விபரத்தையும் படக்குழு வெளியிட உள்ளது.
பிடிஜி யுனிவர்சல் (BTG Universal) நிறுவனத்தின் மூன்றாவது படைப்பாக, நடிகர் அருண் விஜய் நடிப்பில், ’மான் கராத்தே’ இயக்குநர் கிரிஷ் திருக்குமரன் இயக்கத்தில், ஸ்டைலீஷ் ஆக்சன் படமாக உருவாகியுள்ள திரைப்படம் ’ரெட்ட தல’...
சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் மற்றும் கிச்சா கிரியேஷன் தயாரிப்பில், விஜய் கார்த்திகேயன் இயக்கத்தில் நடிகர்கள் கிச்சா சுதீப், நவீன் சந்திரா, விக்ராந்த், யோகி பாபு, தீப்ஷிகா மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மார்க்’...
இயக்குநர் பொன் ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள 'கொம்பு சீவி' திரைப்படத்தில் சரத்குமார், சண்முக பாண்டியன் விஜயகாந்த், தார்னிகா, காளி வெங்கட் , முனீஸ்காந்த், ஜார்ஜ் மரியான், சுஜித் சங்கர், கல்கி ராஜா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்...