முன்னணி இயக்குநர்களின் படங்களில் முக்கியமான வேடங்களில் நடித்து வரும் பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர், சினிமா மட்டும் இன்றி சமூக பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் தஞ்சையில் நடைபெற்ற மாநில அளவிலான கபடி போட்டியில் பங்கேற்ற வீரர்களை துரை சுதாகார் கெளரவித்துள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு வட்டம் ஆம்பலாப்பட்டு கிராமத்தில் டெல்டா சாம்பியன்ஸ் கபடி கழகம் சார்பில் மாநில அளவிலான மாபெரும் கபடி தொடர் நடத்தப்பட்டது. 50 க்கும் மேற்பட்ட அணிகள் இந்த தொடரில் கலந்துக் கொண்டது.

இத்தொடரில் சேலத்தை சேர்ந்த சவன்மேன் ஆர்மி அணி முதல் பரிசை வென்றது. இரண்டாவது பரிசை ஸ்போர்ட்ஸ் கிளப் வடுவூர் அணியினர் வென்றனர். முதல் பரிசு வென்ற அணியினருக்கு சுழற்கோப்பை வழங்கப்பட்டது.

கடந்த 19 ஆம் தேதி நடைபெற்ற இப்போட்டியில், திரைப்பட நடிகர் பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர், சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
மேலும், வெற்றி பெற்றவர்களுக்கு சுழற்கோப்பையை தனது கையால் வெற்றி பெற்ற வீரர்களுக்கு வழங்கி, அவர்களை கெளதவித்த நடிகர் துரை சுதாகர், டெல்டா சாம்பியன்ஸ் கபாடி கழகம் மற்றும் ஆம்பலாப்பட்டு கிராமவாசிகளுடன் இணைந்து விழாவினை சிறப்பித்தார்.

தமிழ் சினிமாவில் 50 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட அனுபவம் கொண்ட மூத்த பத்திரிகையாளர், தயாரிப்பாளர், இயக்குநர் மற்றும் நடிகராக வலம் வரும் சித்ரா லட்சுமணன், ‘டூரிங் டாக்கீஸ்’ என்ற பெயரில் யூடியுப் சேனல் ஒன்றை தொடங்கி நடிகர், நடிகைகள் தொழில்நுட்ப கலைஞர்கள் என ஏராளமான திரை கலைஞர்களை நேர்காணல் கண்டு பல அறிய தகவல்களை வெளியிட்டு வருகிறார்...
செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ (Seven Screen Studio) சார்பில், தயாரிப்பாளர் எஸ்...
பிடிஜி யுனிவர்சல் (BTG Universal) நிறுவனத்தின் மூன்றாவது படைப்பாக, நடிகர் அருண் விஜய் நடிப்பில், ’மான் கராத்தே’ இயக்குநர் கிரிஷ் திருக்குமரன் இயக்கத்தில், ஸ்டைலீஷ் ஆக்சன் படமாக உருவாகியுள்ள திரைப்படம் ’ரெட்ட தல’...