Latest News :

சோனியா அகர்வாலை வில்லியாக்கிய ‘உன்னால் என்னால்’
Thursday August-23 2018

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்த சோனியா அகர்வால், ’உன்னால் என்னால்’ படம் மூலம் வில்லி அவதாரம் எடுத்திருக்கிறார். 

 

ஸ்ரீ ஸ்ரீ கணேஷா கிரியேஷன் என்ற நிறுவனம் சார்பில் ராஜேந்திரன் சுப்பையா தயாரித்திருக்கும் இப்படத்தில் 

ஜெகா, உமேஷ் ஆகிய இருவரும் கதாநாயகர்களாக நடிக்கிறார்கள். முக்கிய வேடமொன்றில் இயக்குநர் ஏ.ஆர்.ஜெயகிருஷ்ணா நடிக்கிறார். கதாநாயகிகளாக லுப்னா, நிகாரிகா, சஹானா ஆகியோர் நடிக்கிறார்கள். மற்றும் ராஜேஷ், ரவிமரியா, டெல்லி கணேஷ், ஆர்.சுந்தர்ராஜன், நெல்லைசிவா ஆகியோர் நடிக்கிறார்கள். மற்றும் சோனியா அகர்வால் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

 

கிச்சாஸ் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு முகமது ரிஸ்வான் இசையமைக்கிறார். தமிழமுதன், கருணாகரன், பொன்சீமான் ஆகியோர் பாடல்கள் எழுதுகிறார்கள். எம்.ஆர்.ரெஜிஷ் எடிட்டிங் செய்ய, விஜய்ராஜன் கலையை நிர்மாணிக்கிறார். கெளசல்யா நடனம் அமைக்க, பில்லா ஜெகன் ஆக்‌ஷன் காட்சிகளை வடிவமைக்கிறார்.  தயாரிப்பு நிர்வாகத்தை மணிகண்டன் கவனிக்க, கதை, திரைக்கதை, வசனம் எழுதி ஏ.ஆர்.ஜெயகிருஷ்ணா இயக்குகிறார்.

 

படம் குறித்து இயக்குநர் ஜெயகிருஷ்ணா கூறுகையில், “பணம் என்பது இன்று எல்லோருக்கும் தேவையான ஒன்று தான்.

 

தேவைக்கு பணம் சேர்த்தால் பரவாயில்லை, ஆடம்பரத்துக்கும் பகட்டுக்கும் என்று சேர்க்க நினைத்தால் குறுக்கு வழிக்குத் தான் போக வேண்டும்.

 

மிகப் பெரிய பணக்காரர் ராஜேஷ் அவருக்கு செக்ரட்டியாக இருக்கும் சோனியா அகர்வால் ராஜேஷை கொலை செய்து விட்டு அந்த சொத்துக்கள் அனைத்தையும் அபகரிக்க திட்டமிடுகிறார். அந்த வலையில் வந்து சிக்குகிறார்கள் ஜெகா, உமேஷ், ஜெயகிருஷ்ணா மூவரும்.

 

இவர்களை வைத்து ராஜேஷை கொலை செய்ய சோனியா போட்ட சதி திட்டம் வெற்றி பெற்றதா இல்லையா என்பது தான் கதை. இதை வேகமான திரைக்கதை மூலம் விறுவிறுப்பாக படமாக்கி உள்ளோம்.

 

அமைதியான கடலுக்குள் தானே ஆக்ரோஷமான புயலும், பூகம்பமும் ஒளிந்திருக்கிறது. அது மாதிரி சோனியா அகர்வாலின் அமைதியான தோற்றத்தை மாற்றி வில்லியாக நடிக்க வைத்திருக்கிறோம்.

’உன்னால் என்னால்’ படம் வித்தியாசமாக இருக்கும்.” என்றார்.

Related News

3297

மார்ச் 6 ஆம் தேதி வெளியாகும் ‘யார்ரா அந்த பையன் நான் தான் அந்த பையன்’!
Wednesday March-04 2026

அறிமுக இயக்குநர் பால்ராஜ் எழுதி இயக்கி, கதையின் நாயகனாக நடித்திருப்பதோடு, பி...

5 இயக்குநர்கள் இயக்கியிருக்கும் ‘வெளவல்ஸ்’ (Vowels)!
Tuesday March-03 2026

காதலின் பல்வேறு பரிமாணங்களை பேசும் தனித்துவமான படம் ‘வெளவல்ஸ்’ (Vowels)...

சுரேஷ் சங்கையாவின் படத்தில் நடித்தது பாக்கியமாக பார்க்கிறேன் - யோகி பாபு நெகிழ்ச்சி
Tuesday March-03 2026

ஜியோ ஹாட் ஸ்டார் வழங்க ஆர். ரமேஷ் பாபு மற்றும் ஜெகன் பாஸ்கரன் இணைந்து தயாரித்து இயக்குநர் சுரேஷ் சங்கையா இயக்கியுள்ள திரைப்படம் "கெணத்த காணோம்...

Recent Gallery