Latest News :

‘லக்‌ஷ்மி’ படமாக மட்டும் அல்லாமல் இன்ஸ்பிரேஷனாகவும் இருக்கும் - ஸ்ருதி நல்லப்பா
Thursday August-23 2018

பிரபு தேவா நடிப்பில், விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘லக்‌ஷ்மி’ ரசிகர்களிடம் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்திய அளவில் பேசப்படும் நடன திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்தில் பிரபு தேவாவுடன் இணைந்து நடித்திருக்கும் குட்டி நடனப் புயல் பேபி தித்யா, இப்படத்தின் மூலம் பெரிய அளவில் பேசப்படுவார் என்பது உறுதி.

 

இந்த நிலையில், இப்படத்தில் நடித்திருக்கும் பேபி தித்யா, படம் பார்க்கும் அனைவருக்கும் ஒரு இன்ஸ்பிரேஷனாகவும் இருப்பார், என்று இப்படத்தின் தயாரிப்பாளர் ஸ்ருதி நல்லப்பா கூறியிருக்கிறார்.

 

இது குறித்து கூறிய ஸ்ருதி நல்லப்பா, “படத்தில் உள்ள ஒவ்வொரு கதாபாத்திரமும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும், பார்வையாளர்கள் அந்த கதாபாத்திரங்களுடன் பயணிப்பார்கள். ’லக்‌ஷ்மி’ படத்தில் ரசிகர்களை நிச்சயம் கொள்ளை கொள்வார். படம் பார்த்து முடித்த பின்னர் பார்வையாளர் மனதில் தங்கி, அவர்கள் வீட்டிற்கு மட்டுமே செல்லாமல், அவர்கள் வாழ்வில் ஒரு இன்ஸ்பிரேஷனாகவும் இருப்பார்.”என்றார். 

 

மேலும் இயக்குநர் விஜய் மற்றும் பிரபு தேவா குறித்து பேசிய ஸ்ருதி, “விஜய் சாரிடம் நான் தனிப்பட்ட முறையில் பார்த்து ரசிக்கும் விஷயம், அவரது திரைப்படங்களில் உள்ள எமோஷனல் விஷயங்களை ஒருபோதும் வெளிப்படுத்த தவறியதில்லை. அதுவே அவரது வெற்றிக்கு பின்னால் ஒரு வலுவான காரணியாக நிரூபிக்கப்பட்டுள்ளது. ஸ்கிரிப்டை படித்தவுடன் நானே இதனை உணர்ந்தேன். கதையின் வலிமையான விஷயமாக நான் நம்பும், கதையில் பிரதிபலிக்கும் ஒவ்வொரு சிறிய உணர்வுகளையும் ஒரு பெண்ணாக என்னால் உணர முடிந்தது. லக்ஷ்மி திரைப்படம், இசை மற்றும் நடனம் ஆகியவற்றை தாண்டி சில விஷயங்களை வெளிப்படுத்தும்.

 

பிரபு தேவாவைப் பற்றி நான் சொல்ல என்ன இருக்கிறது? உலகமே அவரை அறிந்திருக்கிறது. எவ்வளவோ பாராட்டுகள், பட்டங்களை தாண்டி பிரபுதேவா ஒரு நல்ல மனிதர். அவருடன் நடிக்கும் மற்றவர்களை ஊக்குவிக்கும் அவரது செயல் மற்றும் ஒரு தயாரிப்பாளர் நலனில் அக்கறை செலுத்தும் குணம் எப்போதும் என் நினைவில் இருக்கும்.” என்றார்.

 

நாளை முதல் (ஆகஸ்ட் 24) உலகம் முழுவதும் வெளியாக உள்ள ‘லக்‌ஷ்மி’ தமிழகத்தில் மிகப்பெரிய அளவில் வெளியாகிறது.

Related News

3298

மார்ச் 6 ஆம் தேதி வெளியாகும் ‘யார்ரா அந்த பையன் நான் தான் அந்த பையன்’!
Wednesday March-04 2026

அறிமுக இயக்குநர் பால்ராஜ் எழுதி இயக்கி, கதையின் நாயகனாக நடித்திருப்பதோடு, பி...

5 இயக்குநர்கள் இயக்கியிருக்கும் ‘வெளவல்ஸ்’ (Vowels)!
Tuesday March-03 2026

காதலின் பல்வேறு பரிமாணங்களை பேசும் தனித்துவமான படம் ‘வெளவல்ஸ்’ (Vowels)...

சுரேஷ் சங்கையாவின் படத்தில் நடித்தது பாக்கியமாக பார்க்கிறேன் - யோகி பாபு நெகிழ்ச்சி
Tuesday March-03 2026

ஜியோ ஹாட் ஸ்டார் வழங்க ஆர். ரமேஷ் பாபு மற்றும் ஜெகன் பாஸ்கரன் இணைந்து தயாரித்து இயக்குநர் சுரேஷ் சங்கையா இயக்கியுள்ள திரைப்படம் "கெணத்த காணோம்...

Recent Gallery