சிவா இயக்கத்தில் அஜித் தொடர்ந்து நான்காவது முறையாக நடிக்கும் ‘விஸ்வாசம்’ படத்தின் பஸ்ட் லுக் கடந்த விழாயக்கிழமை அதிகாலை 3.40 மணிக்கு வெளியிடப்பட்டது. இதனை அஜித் ரசிகர்கள் விடிய விடிய கொண்டாடினாலும், இப்படி திடீரென்று தலயின் பஸ்ட் லுக் வெளியிடுவதற்கு என்ன காரணமாக இருக்கும், என்று சில ரசிகர்கள் தலைவலி வரும் அளவுக்கு யோசிக்கவும் செய்தார்கள்.
விநாயகர் சதுர்த்தியன்று தான் ‘விஸ்வாசம்’ படத்தின் பஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடுவதாக இருந்தது. ஆனால் திடீரென்று கடந்த விழாயக்கிழமை போஸ்டரை தயாரிப்பு தரப்பு வெளியிடுவதாக ஒரு நாளுக்கு முன்பு அறிவித்து வெளியிட்டது.

’விஸ்வாசம்’ படத்தின் இந்த திடீர் பஸ்ட் லுக் ரிலிஸூக்கு பின்னாடி ஒரு பிளான் இருப்பதாக தற்போது தகவல் பரவிக்கொண்டிருக்கிறது.
அதாவது கேரள வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நடிகர் விஜய் ரூ.70 லட்சம் நிதி வழங்கியதோடு, தனது ரசிகர்கள் மூலம் அம்மாநிலத்தில் பல்வேறு உதவிகளையும் செய்து வருகிறார். இதனால் கேரளா முழுவதும் விஜயின் பெயர் தான் ஒலித்துக் கொண்டிருக்கிறதாம். இதனை ஆப் செய்வதற்காகவே அஜித் தனது படத்தின் பஸ்ட் லுக் போஸ்டரை அவசர அவசரமாக வெளியிட சொன்னதாக கூறப்படுகிறது.

ஆனால், அஜித் அப்படிப்பட்டவர் இல்லை என்று ஒரு தரப்பினர் கூறினாலும், அஜித், விளம்பரத்தை விரும்பாதவரைப் போல தன்னை வெளியில் காட்டிக் கொண்டாலும், மறைமுகமாக தன்னை விளம்பரப்படுத்திக் கொள்வதில் சாமர்த்தியம் படைத்தவர், என்று சில மூத்த பத்திரிகையாளர்கள் கூறுகிறார்கள்.
இந்த நிலையில், ‘விஸ்வாசம்’ போஸ்டரின் திடீர் ரிலீஸ் குறித்தும், அதிகாலையில் ரிலீஸ் செய்யப்பட்டது குறித்தும் விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கிண்டல் செய்ய, பதிலுக்கு அஜித் ரசிகர்களும் ‘சர்கார்’ போஸ்டரில் விஜய் சிகரெட் புகைக்கும் போட்டோவை நீக்கியது குறித்து பதிலுக்கு கலாய்க்க தொடங்கியுள்ளார்கள்.

வெட்டு குத்து வரை போன விஜய் - அஜித் ரசிகரக்ளின் மோதல் கடந்த சில மாதங்களாக இல்லாமல் இருந்த நிலையில், தற்போது மீண்டும் தொடங்கியிருப்பது அனைவரையும் கவலை அடைய செய்திருக்கிறது.
பிடிஜி யுனிவர்சல் (BTG Universal) நிறுவனத்தின் மூன்றாவது படைப்பாக, நடிகர் அருண் விஜய் நடிப்பில், ’மான் கராத்தே’ இயக்குநர் கிரிஷ் திருக்குமரன் இயக்கத்தில், ஸ்டைலீஷ் ஆக்சன் படமாக உருவாகியுள்ள திரைப்படம் ’ரெட்ட தல’...
சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் மற்றும் கிச்சா கிரியேஷன் தயாரிப்பில், விஜய் கார்த்திகேயன் இயக்கத்தில் நடிகர்கள் கிச்சா சுதீப், நவீன் சந்திரா, விக்ராந்த், யோகி பாபு, தீப்ஷிகா மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மார்க்’...
இயக்குநர் பொன் ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள 'கொம்பு சீவி' திரைப்படத்தில் சரத்குமார், சண்முக பாண்டியன் விஜயகாந்த், தார்னிகா, காளி வெங்கட் , முனீஸ்காந்த், ஜார்ஜ் மரியான், சுஜித் சங்கர், கல்கி ராஜா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்...