தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகலில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தொலைக்காட்சி நிகழ்ச்சி மக்களின் பேவரைட் பொழுது போக்கு நிகழ்ச்சியாக உள்ளது. இதன் முதல் சீசன் முடிந்து தற்போது இரண்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.
தெலுங்கு பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியை நடிகர் நானி தொகுத்து வழங்கி வருகிறார். இதில் பங்கேற்ற போட்டியாளர்களில் ஒருவரான நுதன் நாயுடு என்பவர் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியேற்றப்பட்டார். மக்களின் பெரும் ஆதரவு பெற்ற இவர் வெளியேற்றப்பட்டது பலருக்கும் அதிர்ச்சியளித்தது. பிறகு, மக்களின் ஆதரவு காரணமாக மீண்டும் ஒரு வாய்ப்பு பெற்று பிக் பாஸ் போட்டியில் அவர் மீண்டும் கலந்துக்கொண்டார்.
இந்த நிலையில், சில நாட்களுக்கு முன் அவர் தலைவருக்கான டாஸ்கில் பங்கேற்ற போது தோள்பட்டை விலகியது. இதனால் காயப்பட்ட அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தற்போது பிக் பாஸின் சிறப்பு மருத்துவ சிகிச்சை பெற்று வரும் நுதன் நாயுடு, மீண்டும் பிக் பாஸ் போட்டியில் பங்கேற்பது சந்தேகம் தான் என்று கூறப்படுகிறது. அதே சமயம் சிகிச்சைக்குப் பிறகு அவர் போட்டியில் பங்கேற்றாலும் டாஸ்க்குகளில் பங்கேற்காமல் இருப்பார் என்றும் கூறப்படுகிறது.
தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர இசையமைப்பாளர் - பாடகர்- இசை கலைஞரான 'ராக் ஸ்டார் ' அனிருத்தின் இசை நிகழ்ச்சி சென்னையில் நடைபெறுகிறது...
இயக்குநர் மணிரத்னத்தின் சீடரான ஆர்...
ஆல்பம் பாடல்களான “கச்சி சேரா”, “ஆச கூடா”, “சித்திர புத்திரி” போன்ற சென்ஷேசனல் ஹிட் பாடல்களால், இசைத்துறையில் தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கிய சாய் அபயங்கர், இப்போது திரையுலகிலும் கலக்க ஆரம்பித்துள்ளார்...