Latest News :

ரசிகர்களை பாடகர்களாக்கும் சிவகார்த்திகேயனின் ‘சீமராஜா’!
Saturday August-25 2018

‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘ரஜினி முருகன்’ என்று தொடர் வெற்றிப் படங்களை கொடுத்த இயக்குநர் பொன்ராம் - சிவகார்த்திகேயன் கூட்டணியின் 3 வது படம் ‘சீமராஜா’. இதில் சமந்தா ஹீரோயினாக நடிக்க, சூரி, சிம்ரன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள்.

 

சிவகார்த்திகேயனின் படம் என்றாலே பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்த, இந்த ‘சீமராஜா’ கூடுதலாகவே எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. காரணம், இப்படம் தொடங்கப்பட்ட நாளில் இருந்து, தலைப்பு வெளியீடு, பஸ்ட் லுக் வெளியீடு, இசை வெளியீடு என அனைத்தையும் வித்தியாசமான முறையில் அனுகிய தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜா, தற்போது படத்தின் விளம்பரத்தையும் புதிய முறையில் மேற்கொண்டு வருகிறார்.

 

அதன்படி, ‘சீமராஜா’ படத்தின் ‘கரோக்கி பூத்’ சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் உள்ள சினிமா திரையரங்குகளில் திறக்கப்பட்டுள்ளது. இந்த பூத்துகளில் `சீமராஜா' படத்தின் பாடல்கள், பாடல் வரிகளின் வீடியோ தொகுப்பு, மற்றும் டீஸர் இருக்கும். 

 

சிறியவர்களுக்கும், பெரியவர்களுக்கும் தனி தனியாக அமைக்கப்பட்டுள்ள இந்த பூத்களை பயன்படுத்தி ரசிகர்கள் தங்களது திறமையை  வெளிக்காட்டும் வகையில், சீமராஜா பட பாடல்களை பாடுவதோடு, டீசருக்கு ஏற்றவாறு டப்மாஷும் செய்யலாம். இவை அனைத்தும் 24 ஏ.எம் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் யுடியூப் சேனலில் வெளியிடப்படுவதோடு, இதில் சிறப்பாக செயல்படுபவர்களுக்கு இசையமைப்பாளர் டி.இமானுடன் கலந்துரையாடுவதற்கான வாய்ப்பும் வழங்கப்படும்.

 

படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் ‘சீமராஜா’ விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வரும் செப்டம்பர் 13 ஆம் தேதி வெளியாகிறது.

Related News

3313

மார்ச் 6 ஆம் தேதி வெளியாகும் ‘யார்ரா அந்த பையன் நான் தான் அந்த பையன்’!
Wednesday March-04 2026

அறிமுக இயக்குநர் பால்ராஜ் எழுதி இயக்கி, கதையின் நாயகனாக நடித்திருப்பதோடு, பி...

5 இயக்குநர்கள் இயக்கியிருக்கும் ‘வெளவல்ஸ்’ (Vowels)!
Tuesday March-03 2026

காதலின் பல்வேறு பரிமாணங்களை பேசும் தனித்துவமான படம் ‘வெளவல்ஸ்’ (Vowels)...

சுரேஷ் சங்கையாவின் படத்தில் நடித்தது பாக்கியமாக பார்க்கிறேன் - யோகி பாபு நெகிழ்ச்சி
Tuesday March-03 2026

ஜியோ ஹாட் ஸ்டார் வழங்க ஆர். ரமேஷ் பாபு மற்றும் ஜெகன் பாஸ்கரன் இணைந்து தயாரித்து இயக்குநர் சுரேஷ் சங்கையா இயக்கியுள்ள திரைப்படம் "கெணத்த காணோம்...

Recent Gallery