கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 2 தற்போது பரபரப்பான நிலையை அடைந்துள்ளது. வைல்ட் கார்ட் மூலம் நடிகை விஜயலட்சுமி பிக் பாஸ் வீட்டுக்குள் எண்ட்ரியாகியிருக்கிறார். அவர் வந்ததுமே, தன்னை பற்றி போட்டியாளர்கள் பேசும்படி செய்திருக்கிறார்.
அதாவது சர்ச்சையில் சிக்கியிருக்கும் மஹத், ஐஸ்வர்யா உள்ளிட்டவர்களின் பக்கமே போகாமல் அவர்களை விஜயலட்சுமி அவாய்ட் செய்வதும், அது குறித்து மஹத் சக போட்டியாளர்களுடன் விவாதிப்பதும் என்று பிக் பாஸ் வீட்டில் சூடு அதிகரிக்க தொடங்கியுள்ளது.
இதற்கிடையே, கடந்த வாரம், பாலாஜி, மஹத், மும்தாஜ், செண்ட்ராஜன் என 4 பேர் எலிமினேஷன் லிஸ்டிற்கு வந்தனர். இதில் யார் எலிமினேட் மற்றும் காப்பற்றப்படுவார்கள் என்று சிலர் கருத்து கணிப்புகளை நடத்தி வருகிறார்கள்.
அதன்படி, இணையதள ஊடகம் ஒன்றி நடத்திய கருத்து கணிப்பில், மும்தாஜ் அதிக வாக்குகள் பெற்று பிக் பாஸ் போட்ட்யில் நீடிக்க வேண்டும் என்ற மக்களின் விருப்ப தேர்வாகியுள்ளார். அவருக்கு அடுத்தபடியாக பாலாஜி, சென்ராயன் ஆகியோரும் ரசிகர்களிடம் அதிக வாக்குகள் பெற்றிருக்கும் நிலையில், மஹத் தான் குறைந்த வாக்குகள் பெற்றிருக்கிறார்.
எனவே, இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து மஹத் வெளியேற வேண்டும் என்று மக்கள் விருப்பப்படுகிறார்கள் என்பது தெரிகிறது. ஆனால், பிக் பாஸின் விருப்பம் என்னவாக இருக்கும் என்பதை பொருத்திருந்து பார்ப்போம்.
தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர இசையமைப்பாளர் - பாடகர்- இசை கலைஞரான 'ராக் ஸ்டார் ' அனிருத்தின் இசை நிகழ்ச்சி சென்னையில் நடைபெறுகிறது...
இயக்குநர் மணிரத்னத்தின் சீடரான ஆர்...
ஆல்பம் பாடல்களான “கச்சி சேரா”, “ஆச கூடா”, “சித்திர புத்திரி” போன்ற சென்ஷேசனல் ஹிட் பாடல்களால், இசைத்துறையில் தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கிய சாய் அபயங்கர், இப்போது திரையுலகிலும் கலக்க ஆரம்பித்துள்ளார்...