பிக் பாஸ் போட்டியில் இன்று எலிமினேட் எப்பிசோட் ஒளிபரப்பாக உள்ளது. சமீபகாலமாக பல சர்ச்சையான விஷயங்கள் பிக் பாஸ் வீட்டுக்குள் நடப்பதால் கமல் சற்றே கடுப்பில் இருக்கிறார். அதிலும் மஹத் மீது தான் அவருக்கு அதிக கோபம்.
அந்த கோபத்தை வெளிக்காட்டும் விதமாக, மஹத்துக்கு ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றியிருக்கிறார் கமல்.
நேற்ற எபிசோட்டில் மஹத்தை வெளுத்து வாங்கிய கமல்ஹாசன், இன்று அவரை வெளியேற்றுகிறார். அதே சமயம், மக்கள் எதிர்ப்பார்த்தவர்கள் வெளியேறாமல் வேறு சிலர் வெளியேறியதால், இன்றைய எபிசோட்டில் சில எதிர்பாராத மாற்றங்களும் நிகழலாம் என்று கூறப்படுகிறது.
மேலும், வில்லங்கனமான ஆட்கள் இருந்தால் தான் நிகழ்ச்சியின் ரேட்டிங் அதிகரிக்கும் என்று கருதும் பிக் பாஸ் குழுவினர் மஹத்தை காப்பாற்றவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அதேபோல், மும்தாஜ் மற்றும் டேனியுடனான் எல்லை மீறிய விளையாட்டுக்களை ஏற்றுக்கொள்ளாத பிக் பாஸ் அதன் காரணமாக தான் மஹத்தை வெளியேற்றினாராம்.
பிக் பாஸ் வீட்டுக்குள் யாஷிகாவுடன் நெருக்கம் காட்டியதால் மஹத்தின் துபாய் காதலி பிரிந்துவிட்ட நிலையில், தற்போது போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டதால் மஹத் ரொம்பவே அப்செட்டாகியுள்ளாராம்.
மஹத் வெளியேறும் எப்பிசோட் இன்று ஒளிபரப்பாக உள்ளது.
தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர இசையமைப்பாளர் - பாடகர்- இசை கலைஞரான 'ராக் ஸ்டார் ' அனிருத்தின் இசை நிகழ்ச்சி சென்னையில் நடைபெறுகிறது...
இயக்குநர் மணிரத்னத்தின் சீடரான ஆர்...
ஆல்பம் பாடல்களான “கச்சி சேரா”, “ஆச கூடா”, “சித்திர புத்திரி” போன்ற சென்ஷேசனல் ஹிட் பாடல்களால், இசைத்துறையில் தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கிய சாய் அபயங்கர், இப்போது திரையுலகிலும் கலக்க ஆரம்பித்துள்ளார்...