Latest News :

ஒரே மேடையில் மூன்று படங்களின் விழாவை நடத்திய ஸ்ரீ கிரீன் சரவணன்!
Sunday August-26 2018

ராம்கி, இனியா நடித்த ‘மாசாணி’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராக அறிமுகமான எம்.எஸ்.சரவணன், தனது ஸ்ரீ கிரீன் புரொடக்‌ஷன்ஸ் நிருவனம் மூலம் ‘சலீம்’, ‘ஜாக்சன் துரை’ ஆகியப் படங்களை தயாரித்ததோடு, ‘புலி’, ‘வேதாளம்’, ‘பாகுபலி 2’, ’போகன்’, ‘காக்கி சட்டை’ உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை விநியோகம் செய்தவர் தொடர்ந்து பல படங்களை தயாரித்தும் விநியோகமும் செய்து வருகிறார்.

 

தற்போது ஸ்ரீ கிரீன் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் ஜி.வி.பிரகாஷ்குமார், சரத்குமார் நடிப்பில் உருவாகும் ‘அடங்காதே’, சிபிராஜ் நடிப்பில், இளையராஜா இசையமைப்பில் உருவாகும் ‘மாயோன்’ மற்றும் ரகுமான், அறிமுக ஹீரோ ஹவிஸ், நந்திதா சுவேதா ஆகியோரது நடிப்பில் உருவாகும் ‘செவன்’ ஆகிய மூன்று படங்களை தயாரித்து வருகிறது.

 

இந்த மூன்று படங்களின் விழாவும் நேற்று சென்னை கலைவாணர் அரங்கில் முப்பெரும் விழாவாக நடைபெற்றது.

 

முதலில் ‘செவன்’ படத்தின் டீசர் மற்றும் ஒரு பாடல் வெளியிடப்பட்டது. அதை தொடர்ந்து ‘மாயோன்’ படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இறுதியாக ‘அடங்காதே’ படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது.

 

இந்த நிகழ்ச்சியில் ஜி.வி.பிரகாஷ்குமார், சரத்குமார், யோகி பாபு, பாலிவுட் நடிகை மந்த்ரா பேடி, நடிகைகள் சுரபி, நந்திதா சுவேதா, சிபிராஜ், தயாரிப்பாளர்கள் ஆர்.கே.சுரேஷ், கதிரேஷன், டி.தியாகராஜன், இசையமைப்பாளர் ராஹனா, இயக்குநர்கள் பாண்டிராஜ், தங்கர் பச்சான் உள்ளிட்ட ஏராளமான சினிமா பிரபலங்கள் கலந்துக்கொண்டார்கள்.

 

ரகுமான், ஹவிஸ், ரெஜினா கெசண்ட்ரா, நந்திதா சுவேதா, டிரிடா செளத்ரி, அதித்தி ஆர்யா, புஜிதா பொன்னடா, அனிஷா ஆம்ரோஸ் ஆகியோரது நடிப்பில் நடிப்பில் ஸ்ரீ கிரீன் புரொடக்‌ஷன்ஸ் எம்.எஸ்.சரவணன் தயாரித்திருக்கும் ‘செவன்’ படத்திற்கு ஒளிப்பதிவு செய்து, கூடுதல் திரைக்கதை அமைத்து வசனம் எழுதி நிஷார் ஷரீப் இயக்கியிருக்கிறார். கதை மற்றும் திரைக்கதையை ரமேஷ் வர்மா எழுத, பிரவீன் கே.எல் படத்தொகுப்பு செய்திருக்கிறார். சய்தன் பரத்வாஜ் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.

sevan

 

சிபிராஜ் நடிப்பில் டபுள் மீனிங் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்துடன் ஸ்ரீ கிரீன் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்திருக்கும் ’மயோன்’ படத்தை கிஷோர் இயக்க, இளையராஜா இசையமைத்திருக்கிறார். சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு ராம் பாண்டியன் படத்தொகுப்பு செய்கிறார்.

 

Maayon

 

ஜி.வி.பிரகாஷ் குமார், சுரபி, சரத்குமார், மந்த்ரா பேடி, தம்பி ராமையா, யோகி பாபு, பிளேட் சங்கர், அபிஷேக் சங்கர் ஆகியோரது நடிப்பில் ஸ்ரீ கிரீன் புரொடக்‌ஷன்ஸ் தயாரித்திருக்கும் ‘அடங்காதே’ படத்தை சண்முகம் முத்துசுவாமி தயாரித்திருக்கிறார். பி.கே.வர்மா ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார். விவேக் ஹர்ஷன் படத்தொகுப்பு செய்கிறார்.

 

Adangathey

Related News

3319

புதிய சாதனை படைத்த அனிருத்தின் சென்னை இசை நிகழ்ச்சி!
Wednesday July-09 2025

தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர இசையமைப்பாளர் - பாடகர்- இசை கலைஞரான 'ராக் ஸ்டார் ' அனிருத்தின் இசை நிகழ்ச்சி சென்னையில் நடைபெறுகிறது...

’பல்டி’ படத்தில் இசையமைப்பாளராக ஒப்பந்தமாகியுள்ளார் சாய் அபயங்கர்!
Wednesday July-09 2025

ஆல்பம் பாடல்களான “கச்சி சேரா”, “ஆச கூடா”, “சித்திர புத்திரி” போன்ற சென்ஷேசனல் ஹிட் பாடல்களால், இசைத்துறையில் தனக்கென தனி  அடையாளத்தை உருவாக்கிய சாய் அபயங்கர், இப்போது திரையுலகிலும் கலக்க ஆரம்பித்துள்ளார்...

Recent Gallery