தமிழ் சினிமா மட்டும் இன்றி இந்திய சினிமா முழுவதும் நடிகைகள் செக்ஸ் டார்ச்சர் குறித்து பேசி வருகிறார்கள். தற்போதைய காலக்கட்டத்தில் நடித்து வரும் சில நடிகைகள் இது குறித்து வெளிப்படையாக பேசுவதினால், முன்னாள் நடிகைகள் பலர் தங்களுக்கு நேர்ந்த செக்ஸ் தொல்லைகள் குறித்து பேச தொடங்கியிருக்கிறார்கள்.
அந்த வகையில், தென் இந்திய சினிமாவின் முன்னணி ஹீரோயினாக வலம் வந்த நடிகை மீனா, சமீபத்திய பேட்டி ஒன்றில் செக்ஸ் தொல்லை குறித்து பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரஜினி, கமல், அஜித், விஜய் என அனைத்து முன்னணி நடிகர்களுடன் நடித்திருக்கும் மீனா, தமிழ் மட்டும் இந்தி தெலுங்கு, கன்னடம், மலையாளம் என தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் மூன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்துவிட்டார்.
திருமணத்திற்கு பிறகு நடிப்பதை தவிர்த்து வந்தவர், ஒரு சில படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருவதோடு, தனது மகள் நைனீக்காவை குழந்தை நட்சத்திரமாக நடிக்க வைத்து வருகிறார்.
இந்த நிலையில், சமீபத்தில் பேட்டி ஒன்றில் சினிமாவில் நடிகைகளுக்கு செக்ஸ் தொல்லை கொடுக்கப்படுவது குறித்து மீனாவிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், ”ரொம்ப துயரமான விஷயம். எல்லா துறைகளிலும் பெண்களுக்கு பிரச்சினை உண்டு. நான் அதை எதிர்கொள்ளவில்லை என்றாலும் என் காலத்தில் சினிமாவில் அந்த பிரச்சினை இருந்தது.
வக்கிர புத்தியுடைய ஆண்கள் திருந்தணும். அவங்க ஒரு பெண்ணிடம் டீல் பேசுறதுக்கு முன்னாடி, தங்களுக்கும் மனைவி, மகள் இருக்கிறார்கள் என்பதை உணரனும். அதே சமயம், திறமைக்கான வாய்ப்பை வேறு எந்த சமரசமும் இல்லாமல், பெண்கள் போராடிப் பெறணும்.” என்று தெரிவித்தார்.
மீனாவின் இந்த டீல் பேட்டியால் கோடம்பாக்கத்தில் சற்று பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பிடிஜி யுனிவர்சல் (BTG Universal) நிறுவனத்தின் மூன்றாவது படைப்பாக, நடிகர் அருண் விஜய் நடிப்பில், ’மான் கராத்தே’ இயக்குநர் கிரிஷ் திருக்குமரன் இயக்கத்தில், ஸ்டைலீஷ் ஆக்சன் படமாக உருவாகியுள்ள திரைப்படம் ’ரெட்ட தல’...
சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் மற்றும் கிச்சா கிரியேஷன் தயாரிப்பில், விஜய் கார்த்திகேயன் இயக்கத்தில் நடிகர்கள் கிச்சா சுதீப், நவீன் சந்திரா, விக்ராந்த், யோகி பாபு, தீப்ஷிகா மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மார்க்’...
இயக்குநர் பொன் ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள 'கொம்பு சீவி' திரைப்படத்தில் சரத்குமார், சண்முக பாண்டியன் விஜயகாந்த், தார்னிகா, காளி வெங்கட் , முனீஸ்காந்த், ஜார்ஜ் மரியான், சுஜித் சங்கர், கல்கி ராஜா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்...