செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் ‘என்.ஜி.கே’ படத்தின் படப்பிடிப்புக்கு சில நாட்கள் விடுமுறை விடப்பட்டிருந்த நிலையில், தற்போது மீண்டும் படப்பிடிப்பு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
தற்போது ஆந்திரமாநிலம் ராஜமுந்திரியில் ‘என்.ஜி.கே’ படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்த தகவலை இயக்குநர் செல்வராகவன் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இதனை அறிந்த ரசிகர்கள் சூர்யாவை காண படப்பிடிப்பு தளத்திற்கு வந்தவண்ணம் இருந்தார்கள்.
நேற்று ‘என்.ஜி.கே’ படப்பிடிப்பு தளத்திற்கு ஏகப்பட்ட ரசிகர்கள் வந்தவண்ணம் இருந்ததைப் பார்த்து படக்குழுவினர் அதிர்ச்சியாகிவிட்டனர். சில மணி நேரங்களில் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் படப்பிடிப்பு தளத்தை சூழ்ந்துக்கொண்டார்கள். பிறகு கேரவேனில் இருந்து சூர்யா வெளியே வந்ததும் அவரை சூழ்ந்துக் கொண்ட ரசிகர்கள் “ராஜு பாய்”ம் “சூர்யா” என்று கோஷமிட்டனர். சூர்யாவும் அவர்களுக்கு கையசைத்து அவர்களின் அன்பை ஏற்றுக்கொண்டார்.
தமிழில் எப்படி சூர்யாவுக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்களோ அதுபோல், ஆந்திராவிலும் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருப்பதோடு, அவரது படங்கள் அனைத்தும் தெலுங்கில் வெளியாகி வெற்றியும் பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கும் இப்படத்தில் சூர்யா அரசியல்வாதியாக நடிப்பதால் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
பிடிஜி யுனிவர்சல் (BTG Universal) நிறுவனத்தின் மூன்றாவது படைப்பாக, நடிகர் அருண் விஜய் நடிப்பில், ’மான் கராத்தே’ இயக்குநர் கிரிஷ் திருக்குமரன் இயக்கத்தில், ஸ்டைலீஷ் ஆக்சன் படமாக உருவாகியுள்ள திரைப்படம் ’ரெட்ட தல’...
சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் மற்றும் கிச்சா கிரியேஷன் தயாரிப்பில், விஜய் கார்த்திகேயன் இயக்கத்தில் நடிகர்கள் கிச்சா சுதீப், நவீன் சந்திரா, விக்ராந்த், யோகி பாபு, தீப்ஷிகா மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மார்க்’...
இயக்குநர் பொன் ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள 'கொம்பு சீவி' திரைப்படத்தில் சரத்குமார், சண்முக பாண்டியன் விஜயகாந்த், தார்னிகா, காளி வெங்கட் , முனீஸ்காந்த், ஜார்ஜ் மரியான், சுஜித் சங்கர், கல்கி ராஜா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்...