Latest News :

மகிழ்ச்சியில் சிம்பு! - காரணம் ஜோதிகா
Monday August-27 2018

ஜோதிகா நடிப்பில் ராதா மோகன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘காற்றின் மொழி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து பின்னணி வேலைகள் நடைபெற்று வருகிறது.

 

பாப்டா மீடியா இந்தியா நிறுவனம் சார்பில் தனஞ்செயன், எஸ்.விக்ரம் குமார் மற்றும் லலிதா தனஞ்செயன் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் ஜோதிகாவுக்கு ஜோடியாக விதார்த் நடிக்க, எம்.எஸ்.பாஸ்கர், லக்‌ஷ்மி மஞ்சு உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.

 

மேலும், நடிகர் சிம்பு இப்படத்தில் சிம்புவாகவே நடித்திருக்கிறார். அதாவது எப்.எம் ரேடியோவில் பணியாற்றும் ஜோதிகா திரைப்பட நடிகர் சிம்புவை பேட்டி எடுப்பது போன்ற காட்சி ஒன்று இடம் பெறுகிறது. இந்த காட்சியில் தான் சிம்பு சிம்புவவாகவே நடித்திருக்கிறார். தற்போது அவர் நடித்த காட்சிக்கு டப்பிங் பேசியும் முடித்திருக்கிறார்.

 

Simbu

 

இது குறித்து கூறிய தயாரிப்பாளர் தனஞ்செயன், “சிம்பு வரும் காட்சிகளை அவரிடம் சொன்ன போது, அது அவருக்கு ரொம்பவே பிடித்துவிட்டது. ஜோதிகாவுடன் திரையில் தோன்றுவதில் மகிழ்ச்சி, அவர் மேல் எனக்கு பெரிய மரியாதை உண்டு. கண்டிப்பாக நடிக்கிறேன், என்று கூறி நடித்துக் கொண்டுத்தார். டப்பிங் பேசி முடித்த சிம்பு தன்னுடைய காட்சி சிறப்பாக வந்துள்ளதாக் என்னை அழைத்து கூறினார். அவர் இந்த படத்தில் பணியாற்றியது படத்துக்கு பெரிய பலம். அவருக்கும் இந்த படத்தில் நடித்ததில் மகிழ்ச்சி.” என்று தெரிவித்தார்.

 

தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள ‘காற்றின் மொழி’ ஆயுத பூஜையை முன்னிட்டு வரும் அக்டோபர் 18 ஆம் தேதி வெளியாக உள்ளது. அன்றைய தினம் தான் படத்தின் நாயகி ஜோதிகாவின் பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

3324

மார்ச் 6 ஆம் தேதி வெளியாகும் ‘யார்ரா அந்த பையன் நான் தான் அந்த பையன்’!
Wednesday March-04 2026

அறிமுக இயக்குநர் பால்ராஜ் எழுதி இயக்கி, கதையின் நாயகனாக நடித்திருப்பதோடு, பி...

5 இயக்குநர்கள் இயக்கியிருக்கும் ‘வெளவல்ஸ்’ (Vowels)!
Tuesday March-03 2026

காதலின் பல்வேறு பரிமாணங்களை பேசும் தனித்துவமான படம் ‘வெளவல்ஸ்’ (Vowels)...

சுரேஷ் சங்கையாவின் படத்தில் நடித்தது பாக்கியமாக பார்க்கிறேன் - யோகி பாபு நெகிழ்ச்சி
Tuesday March-03 2026

ஜியோ ஹாட் ஸ்டார் வழங்க ஆர். ரமேஷ் பாபு மற்றும் ஜெகன் பாஸ்கரன் இணைந்து தயாரித்து இயக்குநர் சுரேஷ் சங்கையா இயக்கியுள்ள திரைப்படம் "கெணத்த காணோம்...

Recent Gallery