தமிழ் சினிமாவின் முன்னணி நாயகியாக உள்ள நயந்தாரா, லேடி சூப்பர் ஸ்டார் என்ற படத்தோடு, பல முன்னணி ஹிரோக்களுடன் போட்டி போட்டுக் கொண்டு மாஸ் காட்டி வருகிறார்.
சமீபத்தில் வெளியான ‘கோலமாவு கோகிலா’ நயந்தாராவின் மாஸை பல மடங்கு அதிகரித்திருக்கிறது. ஒரு ஹீரோயின் படம் இப்படி ஒரு வசூலை ஈட்டிருயிருப்பதை பார்த்து திரையுலகினரே ஆச்சரிப்படும் விதத்தில் அப்படம் வசூலில் பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளது.
இந்த நிலையில், அமெரிக்க பாக்ஸ் ஆபிஸில் இடம் பிடித்திருக்கும் ‘கோலமாவு கோகிலா’ அங்கு புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளது. ஆம், இதுவரை அமெரிக்க பாக்ஸ் ஆபிஸில் $200K வசூலித்திருப்பதோடு, இந்த வாரம் வெளியான படங்களில் நான்காவது இடத்தையும் அங்கு பிடித்திருக்கிறது.
காலா, தானா சேர்ந்த கூட்டம், விஸ்வரூபம் 2 ஆகிய படங்கள் முதல் மூன்று இடங்களில் இருக்க, நான்காவது இடத்தை பிடித்திருக்கும் நயந்தாராவின் ‘கோலமாவு கோகிலா’ முன்னணி ஹீரோக்களின் ரேஸில் இணைந்திருப்பதோடு, விரைவில் அவர்களை முந்திச் செல்லவும் கூடும் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.
அமெரிக்க பாக்ஸ் ஆபிஸில் இடம் பிடித்த ஒரே நடிகை என்ற பெருமையும் நயந்தாரவுக்கே கிடைத்திருக்கிறது.
தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர இசையமைப்பாளர் - பாடகர்- இசை கலைஞரான 'ராக் ஸ்டார் ' அனிருத்தின் இசை நிகழ்ச்சி சென்னையில் நடைபெறுகிறது...
இயக்குநர் மணிரத்னத்தின் சீடரான ஆர்...
ஆல்பம் பாடல்களான “கச்சி சேரா”, “ஆச கூடா”, “சித்திர புத்திரி” போன்ற சென்ஷேசனல் ஹிட் பாடல்களால், இசைத்துறையில் தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கிய சாய் அபயங்கர், இப்போது திரையுலகிலும் கலக்க ஆரம்பித்துள்ளார்...