பிரஷாந்த் நடிப்பில் உருவாகி வரும் ‘ஜானி’ படத்தில் ஹீரோயினாக சஞ்சிதா ஷெட்டி நடிக்க, பிரபு முக்கிய வேடம் ஒன்றில் நடிக்கிறார். இவர்களுடன் பாலிவுட் நடிகர் அஷுடோஷ் ராணா வில்லனாக நடிக்க மற்றும் ஷாயஜி ஷிண்டே, ஆனந்தராஜ், தேவதர்ஷினி, சோனா, கலைராணி ஆகியோரும் நடிக்கிறார்கள்.
சஸ்பென்ஸ் ஆக்ஷன் திரில்லர் படமாக உருவாகும் இப்படத்தை வெற்றிசெல்வன் இயக்க, எம்.வி.பன்னீர் செல்வம் ஒளிப்பதிவு செய்கிறார். கலைத் துறையை மிலன் கவனிக்க, சுப்ரீம் சுந்தர் ஆக்ஷன் காட்சிகளை வடிமைக்கிறார்.
இந்த நிலையில், இப்படத்தின் டீசர் நேற்று வெளியிடப்பட்டது. பிரபல இயக்குநர் மணிரத்னம் டீசரை வெளியிட்டார். டீசரை பார்த்து பிரஷாந்தை வெகுவாக பாராட்டியவர், நிச்சயம் இப்படம் மிகப்பெரிய வெற்றி பெறும் என்றும் கூறினார்.
‘ஜானி’ என்ற தலைப்பினாலயே இப்படம் ரசிகர்களிடம் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், தற்போது படத்தின் டீசர் ரசிகர்களிம் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
அறிமுக இயக்குநர் பால்ராஜ் எழுதி இயக்கி, கதையின் நாயகனாக நடித்திருப்பதோடு, பி...
காதலின் பல்வேறு பரிமாணங்களை பேசும் தனித்துவமான படம் ‘வெளவல்ஸ்’ (Vowels)...
ஜியோ ஹாட் ஸ்டார் வழங்க ஆர். ரமேஷ் பாபு மற்றும் ஜெகன் பாஸ்கரன் இணைந்து தயாரித்து இயக்குநர் சுரேஷ் சங்கையா இயக்கியுள்ள திரைப்படம் "கெணத்த காணோம்...