90 களில் தமிழ் சினிமா மட்டும் இன்றி தென்னிந்திய சினிமாவிலும் முன்னணி ஹீரோயினாக வலம் வந்தவர் மீனா. குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமானவர், ஹீரோயினாகவும் முன்னணி இடத்தை பிடித்தார்.
ரஜினிகாந்த், கமல்ஹாசன், சிரஞ்சீவி, மோகன்லால் என்று தென்னிந்திய சினிமாவின் முன்னணி ஹீரோக்கள் பலருடன் ஜோடியாக நடித்திருக்கும் மீனா அஜித் போன்ற அடுத்த தலைமுறை முன்னணி ஹீரோக்களுடனும் ஜோடியாக நடித்திருக்கிறார்.
ஆனால், விஜயுடன் மட்டும் அவர் ஜோடியாக நடித்ததே இல்லை. ‘ப்ரியமுடன்’, ‘ப்ரண்ட்ஸ்’ உள்ளிட்ட விஜயின் பல படங்களில் மீனாவை ஹீரோயினாக்க முயற்சிக்கப்பட்ட போதிலும் அவர் கடைசிவரை விஜயுடன் ஜோடி சேரவில்லை. அந்த குறையை போக்குவதற்காக ’ஷாஜகான்’ படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனம் ஆடியிருந்தார்.
இந்த நிலையில், விஜயுடன் தான் நடிக்காதது குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் மீனா மனம் திறந்து பேசியிருக்கிறார்.
பல முன்னணி ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்த போதிலும் விஜயுடன் நடிக்காதது தனக்கு வருத்தம் தான் என்று கூறிய மீனா. தனது மகள் விஜய் படத்தில் நடித்த போது, அவரை மீனா சந்தித்தாராம். அப்போது தன்னுடன் நடிக்காதது குறித்து விஜய் நினைவுப்படுத்தியதோடு, “அப்போது நீங்கள் எவ்வளவு பிஸியாக இருந்தீர்கள் என்று எனக்கு தெரியும்” என்றும் கூறினாராம்.
ஏகப்பட்ட படங்களில் நடித்து வந்ததால், சரியான தேதிகள் அமையாததே விஜயுடன் நடிக்க முடியாமல் போனதற்கு காரணம், மற்றபடி எதுவும் இல்லை, என்றும் மீனா கூறியிருக்கிறார்.
பிடிஜி யுனிவர்சல் (BTG Universal) நிறுவனத்தின் மூன்றாவது படைப்பாக, நடிகர் அருண் விஜய் நடிப்பில், ’மான் கராத்தே’ இயக்குநர் கிரிஷ் திருக்குமரன் இயக்கத்தில், ஸ்டைலீஷ் ஆக்சன் படமாக உருவாகியுள்ள திரைப்படம் ’ரெட்ட தல’...
சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் மற்றும் கிச்சா கிரியேஷன் தயாரிப்பில், விஜய் கார்த்திகேயன் இயக்கத்தில் நடிகர்கள் கிச்சா சுதீப், நவீன் சந்திரா, விக்ராந்த், யோகி பாபு, தீப்ஷிகா மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மார்க்’...
இயக்குநர் பொன் ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள 'கொம்பு சீவி' திரைப்படத்தில் சரத்குமார், சண்முக பாண்டியன் விஜயகாந்த், தார்னிகா, காளி வெங்கட் , முனீஸ்காந்த், ஜார்ஜ் மரியான், சுஜித் சங்கர், கல்கி ராஜா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்...