Latest News :

தமிழ் சினிமாவில் அப்பாக்கள் பற்றி பேசுவதில்லை - இயக்குநர் வருத்தம்
Tuesday August-28 2018

தமிழ் சினிமாவில் அப்பாக்கள் பற்றி பேசப்படுவதில்லை, என்று ‘தந்தை சொல்மிக்க மந்திரமில்லை’ படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவில் இயக்குநர் பேரரசு வருத்தப்பட்டார்.

 

அக்னி அருணாச்சலம் கம்பெனி சார்பில் அருண் ராமசாமி தயாரிக்கும் படம் ‘தந்தை சொல்மிக்க மந்திரமில்லை’. புதுமுகங்கள் நடிக்கும் இப்படத்தை சிவபாலகிருஷ்ணன் இயக்குகிறார். 

 

ஜெயராஜ் சக்ரவர்த்தி இசையமைத்திருக்கும் இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில் கில்டு தலைவர் ஜாக்குவார் தங்கம், பிலிம் சேம்பர் தலைவர் அபிராமி ராமநாதன், பி.ஆர்.ஓ சங்க தலைவர் விஜயமுரளி, நடிகர்கள் ஜெய்வந்த், ரமேஷ் கண்ணா, இயக்குநர் பேரரசு, தயாரிப்பாளர் செளந்தர் மற்றும் படக்குழுவினர் அனைவரும் கலந்துக்கொண்டார்கள்.

 

நிகழ்ச்சியில் பேசிய தயாரிப்பாளர் அபிராமி ராமநாதன், “சிறு முதலீட்டு திரைப்படங்களால் தான் திரையரங்கங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. பெரிய நடிகர்களின் படங்கள் ஆண்டுக்கு ஐந்தில் இருந்து பத்து படங்கள் வெளியாகும் நிலையில், சிறு படங்கள் தான் திரையரங்குகளுக்கு உயிர் நாடியாக இருக்கிறது. அதேபோல், சிறு முதலீட்டு படங்கள் சிறப்பான கதையம்சத்தோடு வந்து வெற்றி பெற்றும் வருகிறது. அதுபோல் இந்த ‘தந்தை சொல்மிக்க மந்திரமில்லை’ படமும் வெற்றி பெறும்.” என்றார்.

 

இயக்குநர் பேரரசு பேசும் போது, “சினிமாவில் எப்போது அம்மாக்கள் பற்றி தான் பேசுவார்கள், அம்மாக்களை மையப்படுத்தி தான் படமும் எடுப்பார்கள். எம்.ஜி.ஆர், ரஜினி, கமல், சிவாஜி என அனைத்து நடிகர்களும் அம்மாக்களைப் பற்றி தான் படங்களில் பேசுவார்கள். அது என்ன சாபமோ அப்பாக்கள் பற்றி தமிழ் சினிமாவில் பேசுவதே இல்லை.

 

ஆனால், விஜய், ஜெயம் ரவி, சிம்பு என அப்பாக்கள் மூலம் ஆளானவன ஹீரோக்கள் தான் அதிகம். வாழ்க்கையில் இன்று ஒரு நல்ல நிலையில் இருக்கும் பலர் பின்னாடியும் அப்பாக்கள் இருப்பார்கள். ஆனால் அவர்கள் பற்றி மற்றும் பேசப்படுவதில்லை. சமுத்திரக்கனி சார் தான் ‘அப்பா’ என்று ஒரு படம் எடுத்தார். மற்றபடி அப்பா பற்றி படம் வரவேயில்லை. அந்த குறையை இப்படம் போக்கும் என்பது டைடிலை பார்த்தாலே தெரிகிறது. கிராமத்து பின்னணியில் அப்பாவுக்கு மரியாதை கொடுக்கும் விதத்தில் உருவாகியிருக்கும் இந்த படம் நிச்சயம் வெற்றி பெறும்.” என்றார்.

 

நிகழ்ச்சியில் பேசிய கில்டு தலைவர் ஜாக்குவார் தங்கம், நடிகர் ரமேஷ் கண்ணா, பி.ஆர்.ஓ சங்க தலைவர்  விஜய முரளி உள்ளிட்ட பலரும் படத்தின் தலைப்பு சிறப்பாக உள்ளதாக தெரிவித்ததோடு, இதுபோன்ற ஒரு நல்ல தலைப்புள்ள இப்படமும் அனைத்து தரப்பினரும் பார்க்க கூடிய படமாக இருக்கும், என்று வாழ்த்தி பேசினார்கள்.

Related News

3333

’லாரா’ படத்தின் தலைப்பு போஸ்டரை வெளியிட்ட நடிகர் சத்யராஜ்!
Saturday June-15 2024

'நாக்குக்கு நரம்பில்லை . எதை வேண்டுமானாலும்  பேசும்' என்பார்கள்...

”டிஜிட்டல் தளங்களில் படைப்பு சுதந்திரம் இல்லை” - ’கருடன்’ வெற்றி விழாவில் வெற்றிமாறன் பேச்சு
Saturday June-15 2024

இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கத்தில், சூரி நாயகனாகவும், சசிகுமார் மற்றும் உன்னி முகுந்தன் முக்கிய வேடங்களில் நடிக்க, கடந்த மாதம் வெளியான ‘கருடன்’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் வரவேற்பை பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது...