Latest News :

8 பேக் உடற்கட்டுடன் கோடம்பாக்கத்தில் எண்ட்ரியாகும் புதுமுக ஹீரோ!
Wednesday August-29 2018

விஷால், சூர்யா, பரத், அருண் விஜய் என பல தமிழ் ஹீரோக்கள் 6 பேக்கை வைத்து நடித்திருக்கும் நிலையில் 8 பேக் உடற்கட்டுடன் கோலிவுட்டில் ஹீரோ ஒருவர் அறிமுகமாகியிருக்கிறார்.

 

விகாஷ் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் விகாஷ் ரவிச்சந்திரன் தயாரித்திருக்கும் ‘இராஜாவின் பார்வை இராணியின் பக்கம்’ படத்தின் மூலம் தான் 8 பேக் உடற்கட்டு ஹீரோ ஆதவா அறிமுகமாகிறார். இப்படத்தில் நாயகியாக அவந்திகா நடித்திருக்கிறார். இவர் பல மலையாள படங்களில் நடித்திருக்கிறார். இவர்களுடன் மதுமிதா, கானா உலகநாதன், சிங்கப்பூர் தீபன் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.

 

சந்தான கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு லியாண்டர் லீ மார்டின் இசையமைத்திருக்கிறார். விக்னேஷ் ஜெய்பால் பாடல்கள் எழுதியிருக்கிறார். மகிரங்கி கலையை நிர்மாணிக்க, இத்ரீஸ் எடிட்டிங் செய்திருக்கிறார். ஆக்‌ஷன் பிரகாஷ் ஆக்‌ஷன் காட்சிகளை வடிவமைத்திருக்கிறார். சுரேஷ் நடனம் அமைக்க, ஆத்தூர் ஆறுமுகம் தயாரிப்பு மேற்பார்வையை கவனித்திருக்கிறார். இணை தயாரிப்பை எம்.செந்தில் பாலசுப்ரமணியம் மேற்கொண்டிருக்கிறார்.

 

இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கும் அழகுராஜ், படம் குறித்து கூறுகையில், “

முழுக்க முழுக்க காமெடி படமாக உருவாக்கி இருக்கிறோம். தன்னை ஏமாற்றிய காதலியை பழிவாங்க ஒரு பெரிய டானின் உதவியை நாடிச்செல்கிறார் நாயகன். அந்த டான் நாயகனை எப்படியெல்லாம் பயன்படுத்திக் கொண்டார் என்பது காமெடி கலவையாக உருவாக்கி இருக்கிறோம்.

 

டானுடன் நாயகியை தேடி நாயகன் செல்கிறார். நாயகிக்கு வேறொருவருடன் திருமணம் நடக்க ஏற்பாடுகள் நடைபெறுகின்றன. இறுதில் நாயகியை கண்டுபிடித்தார்களா இல்லையா? நாயகிக்கு திருமணம் யாருடன் நடந்தது ? என்பதை படு காமெடியாக சொல்லுகிறோம். கிளைமாக்ஸ் காட்சி யாரும் யூகிக்க முடியாத ஒன்றாக இருக்கும். படம் வருகிற செப்டம்பர் 7 ஆம் தேதி உலகம் முழுவதும்  வெளியாக உள்ளது. இந்த படம்  நிச்சயம் ஒரு மறக்க முடியாத காமெடி அனுபவத்தை ரசிகர்களுக்கு தரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.” என்றார்.

Related News

3338

மார்ச் 6 ஆம் தேதி வெளியாகும் ‘யார்ரா அந்த பையன் நான் தான் அந்த பையன்’!
Wednesday March-04 2026

அறிமுக இயக்குநர் பால்ராஜ் எழுதி இயக்கி, கதையின் நாயகனாக நடித்திருப்பதோடு, பி...

5 இயக்குநர்கள் இயக்கியிருக்கும் ‘வெளவல்ஸ்’ (Vowels)!
Tuesday March-03 2026

காதலின் பல்வேறு பரிமாணங்களை பேசும் தனித்துவமான படம் ‘வெளவல்ஸ்’ (Vowels)...

சுரேஷ் சங்கையாவின் படத்தில் நடித்தது பாக்கியமாக பார்க்கிறேன் - யோகி பாபு நெகிழ்ச்சி
Tuesday March-03 2026

ஜியோ ஹாட் ஸ்டார் வழங்க ஆர். ரமேஷ் பாபு மற்றும் ஜெகன் பாஸ்கரன் இணைந்து தயாரித்து இயக்குநர் சுரேஷ் சங்கையா இயக்கியுள்ள திரைப்படம் "கெணத்த காணோம்...

Recent Gallery